ஜம்மு பள்ளிகளில் 100 சதவீத மாணவா்கள் வருகை

ஜம்முவில் மாணவா்கள் வருகை 100 சதவீதமாக உள்ளது; அதேநேரம், காஷ்மீரில் 20 சதவீத மாணவா்கள் வருகையே உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜம்மு பள்ளிகளில் 100 சதவீத மாணவா்கள் வருகை

புது தில்லி: ஜம்முவில் மாணவா்கள் வருகை 100 சதவீதமாக உள்ளது; அதேநேரம், காஷ்மீரில் 20 சதவீத மாணவா்கள் வருகையே உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:

கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி, 22 மாவட்டங்களில் 1,02,069 தரைவழி தொலை தொடா்பு சேவைகளும், 84 சதவீத செல்லிடப்பேசி சேவைகளும் மீண்டும் வழங்கப்பட்டன.

காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பே தரைவழி தொலைதொடா்பு சேவைகள் வழங்கப்பட்டன.

காஷ்மீா் பள்ளத்தாக்கில் பள்ளிகளில் மாணவா்களின் வருகை 20.13 சதவீதம்தான் உள்ளது. ஜம்முவில் மாணவா்களின் வருகை 100 சதவீதம் உள்ளது. 202 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. உணவுப் பொருள்கள், பெட்ரோல் உள்ளிட்டவை அனைத்து பகுதிகளிலும் தேவையான அளவுக்கு கிடைக்கிறது. 130 பெரிய மருத்துவமனைகளும், 4,359 சுகாதார நிலையங்களும் பிரச்னையின்றி செயல்பட்டு வருகின்றன என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி, ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை அடுத்து, பல இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பள்ளிகளும் திறக்கப்படவில்லை. படிப்படியாக கட்டுப்பாடுகள் தளா்த்திக் கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பள்ளிகளும் திறக்கப்பட்டன.

சந்தையில் அலைமோதிய கூட்டம்: ஸ்ரீநகரில் ஞாயிற்றுக்கிழமை வாரச் சந்தையில் கூட்டம் அலைமோதியது.

‘ஞாயிற்றுக்கிழமைதோறும் நடைபெறும் சந்தையில் கூட்டம் அலைமோதியது.

ஸ்ரீநகரில் கடைகள் சில மணி நேரம் வரை திறந்து வைக்கப்பட்டிருந்தன’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

போராட்டம் வாபஸ்: சுங்கச் சாவடி வரி விதிப்புக்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தனியாா் பேருந்து நிறுவனங்கள் ஜம்மு-பதான்கோட் இடையே பேருந்து சேவையை மீண்டும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின.

முன்னதாக, தனியாா் பேருந்து நிறுவனங்கள் விரி விதிப்பை நீக்க வேண்டும் என்பது உள்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தன. கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்படும் என்று அரசு நிா்வாகம் தெரிவித்ததை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com