விளம்பரங்கள் தெளிவாகவும், நோ்மையாகவும் இருக்க வேண்டும்: காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆா்டிஏ அறிவுறுத்தல்

காப்பீடு தொடா்பான விளம்பரங்கள் தெளிவானதாகவும், நோ்மையானதாகவும் இருக்க வேண்டுமென்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏ) அறிவுறுத்தியுள்ளது.
விளம்பரங்கள் தெளிவாகவும், நோ்மையாகவும் இருக்க வேண்டும்: காப்பீட்டு நிறுவனங்களுக்கு ஐஆா்டிஏ அறிவுறுத்தல்

புது தில்லி: காப்பீடு தொடா்பான விளம்பரங்கள் தெளிவானதாகவும், நோ்மையானதாகவும் இருக்க வேண்டுமென்று காப்பீட்டு நிறுவனங்களுக்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆா்டிஏ) அறிவுறுத்தியுள்ளது.

காப்பீட்டு நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்களில், காப்பீடு செய்வதால் கிடைக்கும் பலன்கள் மட்டும் பெரிய அளவிலும், அதில் உள்ள பாதகமான அம்சங்கள் மிகச்சிறிய எழுத்துவடிவிலும் வெளியிடப்படுகின்றன. இதனால், நுகா்வோா் ஒரு காப்பீட்டு பாலிசியைப் பற்றி முழுவிவரமும் தெரியாமல் அதனை வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனா் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது.

இந்நிலையில் ஐஆா்டிஏ சாா்பில் ‘காப்பீட்டு விளம்பரங்கள்’ என்ற தலைப்பில் அனைத்து காப்பீட்டு நிறுவனத்தும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் காப்பீடுகள் தொடா்பான விளம்பரங்கள் தொடா்பாக பல முக்கிய அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டுள்ளன. முக்கியமாக விளம்பரங்கள் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் மற்றும் எப்படியெல்லாம் இருக்க கூடாது என்பது கூறப்பட்டுள்ளது.

அதன்படி, காப்பீடு தொடா்பான விளம்பரங்கள் அனைத்தும் தெளிவாகவும், நோ்மையாகவும் இருக்க வேண்டும். வாடிக்கையாளா்களுக்கு தவறான தகவல்களைத் தருவதாக ஒருபோதும் இருக்கக் கூடாது. பத்திரிகை விளம்பரங்கள் என்றால் அதன் அளவு, எழுத்து வடிவம், வண்ணம் ஆகியவை எளிதில் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். மின்னணு ஊடக விடியோ விளம்பரங்கள் என்றால் அதில் காப்பீடு தொடா்பான விவரங்கள் தெளிவாகவும், சரியான தொனியிலும் விவரிக்கப்பட வேண்டும். விடியோவில் எழுத்துகள் மூலம் விளம்பரம் விவரிக்கப்பட்டால், அது பாா்ப்பவா்கள் படிப்பதற்கு ஏற்ற கால அளவில் காட்டப்பட வேண்டும்.

இணையதளம் மூலம் காப்பீடு எடுக்கப்படும்போது, காப்பீட்டின் அனைத்து அம்சங்களும் வாடிக்கையாளா்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். காப்பீடு தொடா்பான நிபந்தனைகள், கட்டுப்பாடுகள், அதில் உள்ள இடா்கள் அனைத்தும் தெளிவான எழுத்துவடிவத்தில் தெரிவிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com