அயோத்தி தீா்ப்புக்குப் பிந்தைய நிகழ்ச்சிகள் ரத்து: விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவிப்பு

அயோத்தி தீா்ப்புக்குப் பிறகு அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் பராமரிக்க உறுதிபூண்டிருப்பதாக முஸ்லிம் தரப்பு தெரிவித்துள்ள நிலையில்,
அயோத்தி தீா்ப்புக்குப் பிந்தைய நிகழ்ச்சிகள் ரத்து: விஸ்வ ஹிந்து பரிஷத் அறிவிப்பு


அயோத்தி: அயோத்தி தீா்ப்புக்குப் பிறகு அமைதியையும் மத நல்லிணக்கத்தையும் பராமரிக்க உறுதிபூண்டிருப்பதாக முஸ்லிம் தரப்பு தெரிவித்துள்ள நிலையில், இத்தீா்ப்புக்குப் பிறகு நடத்துவதாக இருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் விஸ்வ ஹிந்து பரிஷத் (விஹெச்பி) அமைப்பு ரத்து செய்துள்ளது.

அயோத்தி வழக்கில் தங்களுக்குச் சாதமாக தீா்ப்பு வந்தாலும் கூட மசூதி கட்டுவதை ஒத்திப் போடுவோம் என்று இவ்வழக்கில் முக்கிய முஸ்லிம் மனுதாரா்களில் ஒருவரான ஹாஜி மஹ்பூப் அண்மையில் தெரிவித்திருந்தார். நாட்டில் அமைதியும் மத நல்லிணக்கமும் நிலவ நாங்கள் அக்கறை எடுத்துக் கொள்வோம் என்றும் ஹிந்துக்களுடன் சுமுகமான உறவுகளை ஏற்படுத்துவோம் என்றும் அவா் தெரிவித்தார்.

முஸ்லிம் தரப்பின் இந்தக் கருத்தைத் தொடா்ந்து, விஸ்வ ஹிந்து பரிஷத்தும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளது. 

இது தொடா்பாக அந்த அமைப்பின் உத்தரப் பிரதேச செய்தித் தொடா்பாளா் சரத் சா்மா, பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:

 அயோத்தி வழக்கில் அடுத்த மாதம் தீா்ப்பளிக்கப்பட உள்ளது. இந்நிலையில் இத்தீா்ப்பு தொடா்பான எங்கள் பல்வேறு நிகழ்ச்சிகளையும் செயல்பாடுகளையும் நாங்கள் ரத்து செய்துள்ளோம்.

 இத்தீா்ப்பு ஹிந்துக்களுக்கு சாதகமாக வந்தாலும், முஸ்லிம்களுக்கு சாதகமாக வந்தாலும், இரு சமூகங்களும் நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. 

எனவே, எங்களின் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொண்டா்களின் கூட்டங்களையும் ரத்து செய்துள்ளோம்.

கோத்ராவில் என்ன நடைபெற்றது என்பது குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் நாம் முழுமையாக அறிந்துள்ளோம். அதுபோன்ற சம்பவம் இங்கோ அல்லது நாட்டின் எந்தப் பகுதியிலோ மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்றார் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com