தபால் சேவை நிறுத்தம்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்

இந்தியாவுடனான தபால் சேவையை எந்தவித முன்னறிவிப்புமின்றி பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதற்காக மத்திய அரசு அந்நாட்டுக்கு திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளது. 
தபால் சேவை நிறுத்தம்: பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்


இந்தியாவுடனான தபால் சேவையை எந்தவித முன்னறிவிப்புமின்றி பாகிஸ்தான் நிறுத்தியுள்ளதற்காக மத்திய அரசு அந்நாட்டுக்கு திங்கள்கிழமை கண்டனம் தெரிவித்துள்ளது. 
கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட தபால்களை அந்நாடு ஏற்கவில்லை. இந்தியாவிலிருந்து வரும் தபால்களையும், இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய தபால்களையும் அந்நாடு நிறுத்தி வைத்ததை அடுத்து, இந்திய தபால் துறை அதிகாரிகளும் பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டிய தபால்களை நிலுவையில் வைத்துள்ளனர். 
இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாகிஸ்தான் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி இந்தியாவுடனான தபால் சேவையை நிறுத்தியுள்ளது. இது சர்வதேச தபால் சங்கத்தின் விதிகளை மீறிய செயலாகும். 
பாகிஸ்தான் எப்போதும் பாகிஸ்தானைப் போலவே நடந்துகொள்கிறது. சர்வதேச தபால் சங்கத்துக்கு கட்டுப்பட்டு அனைத்து நாடுகளும் இயங்குகின்றன. இந்தியாவுடனான தபால் சேவை கடந்த இரு மாதங்களாக பாகிஸ்தான் நிறுத்தியுள்ளது. எனவே, இந்தியாவும் அத்தகைய நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றார். 
ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்ததை அடுத்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தான் பல்வேறு விவகாரங்களில் இந்தியாவுடனான உறவில் இணக்கமற்ற நிலையை கடைப்பிடித்து வருகிறது. 
தூதரக சேவை, ரயில் சேவை போன்றவற்றை நிறுத்திக் கொண்ட நிலையில், தற்போது தபால் சேவையையும் அந்த நாடு நிறுத்திக் கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com