மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜக முன்னிலை!

​மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மகாராஷ்டிரா, ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

மகாராஷ்டிரா, ஹரியாணா மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதன் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை தொடங்கியது. 

இதில், 288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 160 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி 66 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 8 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. 160 தொகுதிகள் வரை முன்னிலை வகிப்பதால் மகாராஷ்டிராவில் பாஜக மற்றும் சிவசேனா கூட்டணியே ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஹரியாணா மாநிலத்தைப் பொறுத்தவரை பாஜக கூட்டணி 50 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 24 தொகுதிகளிலும், பிற கட்சிகள் 10 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

மகாராஷ்டிரா:

ஆளும் கூட்டணியில், பாஜக 164 இடங்களிலும், சிவசேனை 124 இடங்களிலும் போட்டியிட்டன. எதிர்க்கட்சிக் கூட்டணியில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முறையே 147, 121 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. 1,400 சுயேச்சைகள் உள்பட 3,237 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். 

இந்த மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை சுமார் 8.9 கோடியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com