புதைக்குழியில் விழுந்து உயிருக்குப் போராடிய யானையை போராடி மீட்ட கிராம மக்கள்: பதறவைக்கும் காட்சி

உணவு தேடி கிராமத்தில் புகுந்த யானைக்கூட்டத்தில் இருந்த ஒரு யானை தவறி அங்கிருந்த புதைக்குழியில் விழுந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தது. 

ஒடிஸாவிலுள்ள சுந்தர்கார் மாவட்டத்தின் பிர்டோலா கிராமத்தை அடுத்த படகோன் வனப்பகுதியில் இருந்து யானைக் கூட்டம் புதன்கிழமை இரவு உணவு தேடி பிர்டோலா கிராமத்தில் புகுந்துள்ளது. அப்போது ஒரு யானை அங்கிருந்த புதைக்குழியில் விழுந்துள்ளது. 

இந்நிலையில், வியாழக்கிழமை காலை கிராம மக்கள் அந்த யானையை கண்டறிந்துள்ளனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து தீயணைப்புத்துறையினருடன் அங்கு வந்த வனத்துறை அதிகாரிகள், கிராம மக்களின் உதவியுடன் யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டது.

சுமார் 5 மணி நேர போராட்டத்துக்குப் பின் புதைக்குழியில் இருந்த யானை மீட்கப்பட்டது. பின்னர் வனப்பகுதிக்குள் சென்ற யானையைக் கண்ட கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com