பட்டாசு வெடிக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி அறிவுரை!

நாடே தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், பட்டாசு வெடிக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


நாடே தீபாவளிப் பண்டிகையை கொண்டாடி வரும் நிலையில், பட்டாசு வெடிக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுரை கூறியுள்ளார்.

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலி வாயிலாக "மன் கீ பாத்" நிகழ்ச்சியில் நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்னைகளை சுட்டிக் காட்டி உரையாற்றுவார். இதன் 58-வது நிகழ்ச்சியான இன்று அவர் பேசுகையில்,

"தீபாவளி சமயத்தில் நாம் அனைத்து ரக பட்டாசுகளையும் வெடிப்போம். ஆனால் சில சமயங்களில் கவனக்குறைவால் விபத்து ஏற்படும். காயங்களும் ஏற்படலாம். அதனால், மிகுந்த உற்சாகத்துடன் தீபாவளியைக் கொண்டாடும் போது உங்களை நீங்கள் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். பண்டிகை காலத்தில் உள்ளூர் பொருட்களையே வாங்கி பயன்படுத்த வேண்டும்.

பண்டிகை கால தருணங்கள்தான் நம் வாழ்வில் புதிய உணர்வுகளை தட்டி எழுப்பும். அதுவும் குறிப்பாக தீபாவளிப் பண்டிகையின் போது அனைத்து குடும்பத்திலும் புதிய பொருட்களை வாங்க வேண்டும் என்பது  கட்டாயம். நாம் உள்நாட்டுத் தயாரிப்பு பொருட்களையே வாங்க முயற்சிக்க வேண்டும் என்று நான் ஒரு முறை கூறியிருக்கிறேன். உள்நாட்டுத் தயாரிப்பு பொருட்களையே நாம் அதிகம் வாங்க முயற்சித்தால்,"காந்தி 150" தாமாக மிகப் பெரிய நிகழ்ச்சியாக உருவெடுக்கும்" என்றார்.

இந்த உரையில் அவர் அயோத்தி வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் 2010-இல் வழங்கிய தீர்ப்பையும் நினைவுகூர்ந்தார். அந்த சமயத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுச் சமூகம் மக்களை ஒன்றிணைப்பதற்காக பல்வேறு கருத்துகளை வெளியிட்டதாக அவர் குறிப்பிட்டார். 

அயோத்தி சர்ச்சைக்குரிய நில விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்த நிலையில் உச்சநீதிமன்றம் அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கவுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி இதுகுறித்து பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com