2050க்குள் சென்னை கடலில் மூழ்கும் அபாயம்: மீண்டும் மீண்டும் எச்சரிக்கும் ஆய்வு முடிவுகள்

கார்பன் வெளியேற்றத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் 2050ம் ஆண்டுக்குள் மும்பை, சூரத், சென்னை, கொல்கத்தா நகரங்களின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மெரினா கடற்கரை (கோப்புப் படம்)
மெரினா கடற்கரை (கோப்புப் படம்)


பெங்களூரு: கார்பன் வெளியேற்றத்தை தடுத்து நிறுத்தாவிட்டால் 2050ம் ஆண்டுக்குள் மும்பை, சூரத், சென்னை, கொல்கத்தா நகரங்களின் பல பகுதிகள் கடலுக்குள் மூழ்கும் அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தற்போது கடலோரப் பகுதிகளில் வாழும் 3.1 கோடி மக்கள் ஆண்டுதோறும் வெள்ள அபாயத்தில் சிக்குவதாகவும், இது 2050க்குள் 3.5 கோடி மக்களாகவும், 2100ல் 5.1 கோடி மக்களாக அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கார்பன் வெளியேற்றம் அதிகரித்து வருவதன் காரணமாக ஏற்படும் எதிர்வினைகளே இந்த அபாய நிலைக்குக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நிலவரப்படி சுமார் 25 கோடி மக்கள் ஆண்டுதோறும் வெள்ள அபாயம் மிகுந்த பகுதிகளில் வாழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள், ஏற்கனவே வெளியான ஆய்வு முடிவுகளை விட மிக அதிக ஆபத்தில் நகரங்கள் இருப்பதை எடுத்துக் காட்டியுள்ளதாக இந்த ஆய்வை மேற்கொண்ட கிளைமேட் சென்டரின் நிர்வாக செயல் அதிகாரி பெஞ்சமின் எச். ஸ்டிராஸ் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து புவி வெப்பமயமாதல் மற்றும் பருவ நிலை மாற்றம் குறித்து ஆய்வு நடத்தி வரும் இந்த தன்னார்வ நிறுவனமானது, ஏற்கனவே நடத்தப்பட்ட ஆய்வுகளில் இருந்த சிறு சிறு புள்ளி விவரங்களில் இருந்த தவறுகளை எல்லாம் கண்டுபிடித்து நீக்கி, சரியான புள்ளி விவரங்களைத் தொகுத்து ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், ஏற்கனவே வெளியான ஆய்வு முடிவுகளை விட, மிக விரைவாக நகரங்கள் கடலில் மூழ்கும் அபாயம் இருப்பதை இந்த ஆய்வு வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.

20ம் நூற்றாண்டில் தற்போதிருக்கும் கடல் மட்டத்தை விட, 11-16 செ.மீ. அல்லது 500 மி.லிட்டர் கோக் பாட்டலின் உயரத்தில் பாதி அளவுக்கு கடல் மட்டம் உயர்ந்துவிடும் என்றும் எச்சரிக்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com