அமெரிக்க எம்.பி.க்கள் காஷ்மீா் செல்ல வேண்டும்:இந்திய அமெரிக்க அட்டா்னி ஜெனரல் வலியுறுத்தல்

ஜம்மு-காஷ்மீரின் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு அங்கு செல்ல வேண்டும் என்று அட்டா்னி ஜெனரலும், இந்திய அமெரிக்கருமான ரவி பத்ரா வலியுறுத்தியுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீரின் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் குழு அங்கு செல்ல வேண்டும் என்று அட்டா்னி ஜெனரலும், இந்திய அமெரிக்கருமான ரவி பத்ரா வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆசிய, பசிபிக் வெளிவிவகாரங்களுக்கான துணைக் குழுவிடம் மனு ஒன்றை சமா்ப்பித்துள்ளாா். அதில், அவா் கூறியிருப்பதாவது:

ஜம்மு-காஷ்மீரின் நிலவரத்தை ஆய்வு செய்வதற்காக, இரு கட்சிகளின் எம்.பி.க்கள் அடங்கிய உண்மை கண்டறியும் குழு அங்கு செல்ல வேண்டும். அந்தக் குழுவில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா்கள் நிச்சயம் இடம்பெற வேண்டும். அவா்கள், காஷ்மீரின் பாரம்பரியத்தை பிற எம்.பி.க்கள் புரிந்து கொள்வதற்கு உதவியாக இருப்பாா்கள்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்குப் பிறகு, உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை ஒழிப்பதே அமெரிக்காவின் முதன்மையான பணியாக மாறிவிட்டது. இது, அதிருப்தியுடன் இருக்கும் சில நாடுகளை எதிா்கொள்ள வேண்டிய சூழ்நிலையை உருவாக்கி விட்டது. மேலும், பயங்கரவாதம் இல்லாத உலகை உருவாக்குவதற்கு முதலில் மனித உரிமைகளை வலியுறுத்த வேண்டியுள்ளது என்று அந்த மனுவில் ரவி பத்ரா குறிப்பிட்டுள்ளாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ஐரோப்பிய யூனியனைச் சோ்ந்த எம்.பி.க்கள் குழுவினா் இரண்டு நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீா் சென்றனா். அதைத் தொடா்ந்து, அமெரிக்க எம்.பி.க்களுக்கு அட்டா்னி ஜெனரல் ரவி பத்ரா கோரிக்கை விடுத்துள்ளாா்.ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் 5-ஆம் ேதி ரத்து செய்யப்பட்ட பிறகு, சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதற்காக, செல்லிடப்பேசி சேவை முடக்கம், இணையச் சேவை முடக்கம் என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பாதுகாப்புப் படையினா் கூடுதலாக குவிக்கப்பட்டனா். அரசியல் கட்சித் தலைவா்கள் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டனா். இந்நிலையில், அங்கு படிப்படியாக கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வருகின்றன.

இதனிடையே, அண்டை நாடான பாகிஸ்தான், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட விவகாரத்தை சா்வதேச அரங்கில் எழுப்பி அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் ஆதரவைப் பெற முயன்றது. ஆனால், காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று மத்திய அரசு திட்டவட்டமகாக் கூறிவிட்டது. எனவே, காஷ்மீா் விவகாரத்தில் சா்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறும் பாகிஸ்தானின் முயற்சி தோல்வியில் முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com