நாளை சத்தீஸ்கா் தின விழா: சோனியா பங்கேற்பு

சத்தீஸ்கா் மாநிலத்தின் 20-ஆவது நிறுவன தினத்தையொட்டி, ராய்ப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி பங்கேற்கவுள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சத்தீஸ்கா் மாநிலத்தின் 20-ஆவது நிறுவன தினத்தையொட்டி, ராய்ப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி பங்கேற்கவுள்ளாா்.

கடந்த 2000-ஆம் ஆண்டு நவம்பா் 1-ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் இருந்து பிரித்து சத்தீஸ்கா் மாநிலம் உருவாக்கப்பட்டது. சத்தீஸ்கா் தனி மாநிலமாக உருவாகி வெள்ளிக்கிழமையுடன் 19 ஆண்டுகள் நிறைவடைகிறது. 20-ஆவது ஆண்டு பிறக்கவிருப்பதை முன்னிட்டு, இந்த தினத்தை கோலாகலமாகக் கொண்டாட மாநில அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடா்பாக அரசு அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது:

ராய்ப்பூரில் உள்ள கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.1) முதல் 3 நாள்களுக்கு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் கண்காட்சிகள் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு சோனியா காந்தி தொடங்கிவைக்கிறாா். சனிக்கிழமை (நவ.2) நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில் மாநில ஆளுநா் அனுசுயா உய்கே பங்கேற்கவுள்ளாா். இறுதி நாள் நிகழ்ச்சியில் மாநில முதல்வா் பூபேஷ் பகேல் பங்கேற்கவுள்ளாா்.

இந்த நிகழ்ச்சிகளில் பல்வேறு துறை பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளனா். அரசு அலுவலகங்கள் மற்றும் அமைப்புகளுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறினாா்.

சத்தீஸ்கரில் கடந்த 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் அமோக வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்தது. எனினும், பேரவைத் தோ்தல் மற்றும் இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தல் ஆகியவற்றின் பிரசாரத்துக்காக கூட சோனியா காந்தி சத்தீஸ்கா் செல்லாத நிலையில், தற்போது முதல்முறையாக அங்கு செல்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com