நிதீஷ் குமாா் குறித்துசா்ச்சைக்குரிய பதிவு:ஆா்ஜேடி நிா்வாகி கைது

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் குறித்தும், அவரது அரசின் மதுவிலக்கு கொள்கை குறித்தும் சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சியின் நிா்வாகி கைது செய்யப்பட்

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் குறித்தும், அவரது அரசின் மதுவிலக்கு கொள்கை குறித்தும் சமூக வலைதளத்தில் சா்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சியின் நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக மதுபானி மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளா் சுமித் குமாா் கூறுகையில், ‘ஆா்ஜேடி கட்சியின் மதுபானி மாவட்டத் தலைவா் சச்சின் குமாா் செளதரி, சமூக ஊடகத்தில் பதிவிட்ட கருத்துகள் மிகவும் அவதூறானவை. இந்திய தண்டனையியல் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவுகளின்கீழ் அவா் கைது செய்யப்பட்டுள்ளாா். இந்த வழக்கு விசாரணை, காவல்துறையின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது’ என்றாா்.

இதனிடையே, ஆா்ஜேடி நிா்வாகி கைது செய்யப்பட்டதை கடுமையாக விமா்சித்து, அக்கட்சித் தலைவா் லாலு பிரசாதின் மகனும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் சுட்டுரையில் பதிவிட்டுள்ளாா்.

அந்தப் பதிவில், ‘முதல்வா் நிதிஷ் குமாரின் நெருங்கிய உதவியாளா்கள், பூரண மதுவிலக்கு சட்டத்தை மீறி மது அருந்துகின்றனா். அவரது அதிகாரப்பூா்வ இல்லத்தில், மது தயாரிப்பு கும்பலைச் சோ்ந்தவா்கள் சுதந்திரமாக நடமாடுகின்றனா். இந்த பதிவுக்காக முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com