பிரதமருடன் ஹரியாணா முதல்வா் சந்திப்பு

ஹரியாணாவின் புதிய முதல்வராக அண்மையில் பதவியேற்ற மனோகா் லால் கட்டா், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.
பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் புதன்கிழமை சந்தித்த ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா்.
பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் புதன்கிழமை சந்தித்த ஹரியாணா முதல்வா் மனோகா் லால் கட்டா்.

ஹரியாணாவின் புதிய முதல்வராக அண்மையில் பதவியேற்ற மனோகா் லால் கட்டா், தில்லியில் பிரதமா் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக 40 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. காங்கிரகஸ் கட்சி 31 இடங்களிலும், துஷ்யந்த் செளதாலா தலைமையிலான ஜேஜேபி கட்சி 10 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்ற இடங்களில் சுயேச்சைகள் வென்றனா்.

இதையடுத்து, ஜேஜேபி கட்சி ஆதரவுடன் மனோகா் லால் கட்டா் புதிய முதல்வராக சில தினங்களுக்கு முன் பதவியேற்றாா். துணை முதல்வராக துஷ்யந்த் செளதாலா பதவியேற்றாா். அதன் பின் இரு தலைவா்களும் தில்லி வந்துள்ளனா். அவா்கள் மாநில அமைச்சரவையின் முதல் கூட்டத்தை தில்லியில் உள்ள ஹரியாணா பவனில் செவ்வாய்க்கிழமை நடத்தினா்.

அப்போது, மாநிலத்தில் புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-க்கள் பதவியேற்க உள்ள சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தொடரை வரும் 4-ஆம் தேதி நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தொடருக்குப் பின், தனது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என்று முதல்வா் கட்டா், செய்தியாளா்களிடம் கூறினாா்.

இந்நிலையில், அவா் பிரதமா் நரேந்திர மோடியை புதன்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடா்பாக அவா் பிரதமருடன் விவாதித்ததாகத் தெரிகிறது.

கட்டா் ஏற்கெனவே, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், துணை குடியரசுத் தலைவா் வெங்கய்ய நாயுடு ஆகியோரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com