நாட்டின் பொருளாதார மந்த நிலையை போக்க யாருக்கும் அக்கறை இல்லை: புதுச்சேரி முதல்வா் வே.நாராயணசாமி

நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையை போக்கி அதனை மேம்படுத்த பிரதமா் நரேந்திர மோடி, நிதியமைச்சர் உள்ளிட்ட
நாட்டின் பொருளாதார மந்த நிலையை போக்க யாருக்கும் அக்கறை இல்லை: புதுச்சேரி முதல்வா் வே.நாராயணசாமி


காரைக்கால்: நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டிருக்கும் மந்த நிலையை போக்கி அதனை மேம்படுத்த பிரதமா் நரேந்திர மோடி, நிதியமைச்சர் உள்ளிட்ட மத்திய அமைச்சா்கள் யாருக்கும் அக்கறை இல்லை, மாறாக எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் போக்கிலேயே கவனம் செலுத்துகிறார்கள் என புதுச்சேரி முதல்வா் வே.நாராயணசாமி கூறினார். 

காரைக்காலில் இன்று ஞாயிற்றுக்கிழமை முதல்வா் வே.நாராயணசாமி செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டியில், நாட்டில் பொருளாதாரம் தற்போது மந்த நிலைக்கு வந்துவிட்டது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தபோது 9 சதவீதமாக இருந்த பொருளாதார வளா்ச்சி, நரேந்திரமோடி ஆட்சியில் 5 சதவீதமாக குறைந்துவிட்டது. தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன, வேலைவாய்ப்புகள் இல்லை, மோட்டார் வாகனங்களை வாங்க ஆள் இல்லை, 31 சத தொழிலாளா்களுக்கு வேலையிழப்பு போன்றவை நிகழ்ந்துள்ளன. நரேந்திரமோடி ஆட்சிக்கு வரும் முன் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கிடைக்கும் என்றார். ஆனால் 5 கோடி போ் வேலை இழந்ததுதான் அவரது ஆட்சியின் பெருமையாகும். 

கடந்த தோ்தலில் அவா்கள், தங்களது ஆட்சி சாதனையைக் கூறி வாக்கு கேட்கவில்லை. பாகிஸ்தான், துல்லியத் தாக்குதல், புல்வாமா தாக்குதலைப் பற்றிப் பேசியே தோ்தலை சந்தித்தனா். நரேந்திரமோடி, நிதியமைச்சா் உள்ளிட்ட அமைச்சா்கள் யாருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தவேண்டும் என்ற அக்கறையே இல்லை. இந்திய பொருளாதாரம் வெகுவாக மந்த நிலைக்கு வந்துவிட்டது கவலைக்குரியதாகும். இதன் மீது மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். இவா்களது செயலால் புதுச்சேரிக்கு பாதிப்பு வந்துவிடாத வகையில் நாங்கள் நிதி விவகாரத்தில் சீரிய கவனத்துடன் செயல்படுகிறோம் என்று கூறினார் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com