ஜிஎஸ்டி வசூல் குறைந்தது

நாட்டில் பொருளாதார சுணக்கம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளநிலையில் ஆகஸ்ட் மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் குறைந்து ரூ.98,202 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது.
ஜிஎஸ்டி வசூல் குறைந்தது

நாட்டில் பொருளாதார சுணக்கம் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளநிலையில் ஆகஸ்ட் மாத சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் குறைந்து ரூ.98,202 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது.
 எனினும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 4.5 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.93,960 கோடி மட்டுமே வசூலாகியிருந்தது.
 இந்த ஆண்டில் இப்போது இரண்டாவது முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடிக்கு கீழ் சென்றுள்ளது. இதற்கு முன்பு கடந்த ஜூலை மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.99,939 கோடியாக இருந்தது. எனினும் ஜூலையில் ரூ.1.02 லட்சம் கோடியாக ஜிஎஸ்டி வசூல் அதிகரித்தது.
 கடந்த ஏப்ரல் மாதத்தைப் பொறுத்தவரையில் மத்திய ஜிஎஸ்டி ரூ.17,733 கோடியாகும், மாநில ஜிஎஸ்டி ரூ.24,239 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.48,958 கோடியாகவும் இருந்தது. அதே நேரத்தில் "செஸ்' எனப்படும் கூடுதல் வரி ரூ.7,273 கோடியாக இருந்தது. கடந்த ஜூன்-ஜூலை மாதங்களில் மாநில அரசுகளுக்கு வரி இழப்பீடாக ரூ.27,955 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
 கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை ரூ.5,14,378 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது.
 கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.4,83,538 கோடி ஜிஎஸ்டி வசூலாகியிருந்தது. இதன் மூலம் இந்த ஆண்டு கடந்த 5 மாதங்களில் 6.3 சதவீதம் அளவுக்கு ஜிஎஸ்டி வசூல் அதிகரித்துள்ளது. அனைத்து மறைமுக வரிகளுக்கு மாற்றாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் மூலம் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் தேவைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com