இந்தியாவில் டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுமா? விளக்குகிறார் நிதின் கட்கரி

டீசல் கார் அல்லது டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கும் திட்டம் இல்லை
டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கும் திட்டம் இல்லை


டீசல் கார் அல்லது டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கும் எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இந்தியாவின் ஆட்டோமொபைல் தொழிற்துறையின் உற்பத்தி, வேலை வாய்ப்பு மற்றும் ஏற்றுமதி தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு அதிக அக்கறை செலுத்துகிறது. தற்போது இந்திய ஆட்டோமொபைல்  துறையில் ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.

எஸ்ஐஏஎம் 59வது கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய நிதின் கட்கரி, நாட்டில் டீசலில் இயங்கும் கார் அல்லது டீசல் வாகனங்களை தடை செய்வதற்கு எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை. சுமார் 4.50 லட்சம் கோடி மதிப்பில் இயங்கும் ஆட்டோமொபைல் துறையில் ஏராளமான பணி வாய்ப்புகளும், ஏற்றுமதியும் நடந்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்தும் வருகிறது.

ஆனால் மத்திய அரசு தொடர்ந்து சில சிக்கல்களை சந்தித்து வருகிறது. அதாவது கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் தான் தொடர்ந்து சிக்கல் இருக்கிறது. அது மட்டுமல்ல, காற்று மாசுபாடு மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆகியவைதான் அந்த சிக்கல்கள் என்று நிதின் கட்கரி கூறினார்.

ஆனால் அதே சமயம், வாகனங்கள் மட்டுமே காற்று மாசுபாட்டுக்குக் காரணம் என்று கூறிவிட முடியாது. இன்னும் பல காரணிகளும் இருக்கின்றன. நாட்டிலேயே தில்லி தான் காற்றுமாசுவினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com