சந்திரயான் -2  ரோவர் நிலவில் 14 நாள்கள் தகவலளிக்க வாய்ப்பு : இஸ்ரோ திரவ உந்தும நிலைய வளாக இயக்குநர்

சந்திரயான்-2 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்டுள்ள ரோவர்,  நிலவில் 14 நாள்கள் நிலைபெற்று பல்வேறு தகவல்களை அளிக்க வாய்ப்புள்ளது என்று மகேந்திரகிரி இஸ்ரோ திரவ உந்தும நிலைய வளாக இயக்குநர் மூக்கையா.


சந்திரயான்-2 திட்டத்தின் கீழ் அனுப்பப்பட்டுள்ள ரோவர்,  நிலவில் 14 நாள்கள் நிலைபெற்று பல்வேறு தகவல்களை அளிக்க வாய்ப்புள்ளது என்று மகேந்திரகிரி இஸ்ரோ திரவ உந்தும நிலைய வளாக இயக்குநர் மூக்கையா.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியது:
வளர்ந்த நாடுகளுடன் போட்டியிடுவதற்காக அல்லாமல் நமது நாட்டின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் விண்வெளி ஆய்வுகள் அதிகரிக்கப்பட்டன. கேரள மாநிலத்தில் உள்ள தும்பா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகியவற்றை அமைக்கும் பணிகளில் விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் பங்களிப்பு அளப்பரியது. இப்போது கடலில் எந்தப் பகுதியில் மீன்வளம் உள்ளது என்பதை அறிந்து தெரிவிக்கும் ஆற்றல் இந்திய விண்வெளித் துறையிடம் உள்ளது.
விக்ரம் சாராபாய் நூற்றாண்டு விழாவை தமிழகத்தில் 11 இடங்கள் உள்பட நாடு முழுவதும் 100 இடங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மகேந்திரகிரி இஸ்ரோ திரவ உந்தும நிலையம் சார்பில் 6 இடங்களில் விழா நடைபெறுகிறது. அதன் முதல் நிகழ்ச்சி திருநெல்வேலியில் நடைபெற்றுள்ளது. 
சந்திரயான்-2 திட்டத்தில் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்டின் சில பரிசோதனைகள் மகேந்திரகிரியில் செய்யப்பட்டன. ரஷியா, அமெரிக்கா, சீனாவுக்கு பிறகு நிலவில் ரோவர் தரையிறங்கும் 4-ஆவது நாடாக இந்தியா திகழும். சனிக்கிழமை (செப்.7) அதிகாலை 1.30 மணிக்கு லேண்டர் தரையிறங்கும். பின்னர், அதிலிருந்து ரோவர் நகர்ந்து செல்லும். ரோவர் 14 நாள்கள் சுமார் அரை கி.மீ. தொலைவு நகர்ந்து சென்று பல்வேறு தகவல்களை அளிக்கும் வாய்ப்புள்ளது.
சந்திரனின் பரப்பு எவ்வாறு உள்ளது என்பது தெரியாத நிலையில், ரோவரை அங்கு மென்மையாக தரையிறக்கும் முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com