சுடச்சுட

  

  100 நாள் ஆட்சி கொண்டாட்டம்: மத்திய அரசு மீது பிரியங்கா தாக்கு

  By DIN  |   Published on : 08th September 2019 02:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  priyanka

  மத்தியில் ஆட்சி அமைத்து 100 நாள்கள் ஆகியுள்ளதை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கொண்டாட இருப்பதை காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.
   இதுதொடர்பாக சுட்டுரையில் சனிக்கிழமை பதிவிட்டுள்ள பிரியங்கா, "மத்தியில் ஆட்சி அமைத்து 100 நாள்கள் ஆனதை பாஜக தலைமையிலான அரசு கொண்டாட இருக்கிறது. ஆட்டோமொபைல் துறை, போக்குவரத்துத் துறை, சுரங்கத் துறை உள்ளிட்டவை மோசமான சூழலை எதிர்கொண்டுள்ள நிலையில், மத்திய அரசு இத்தகைய கொண்டாட்டத்தில் ஈடுபடுகிறது.
   தங்களின் வீழ்ச்சியையே அரசு இவ்வாறு கொண்டாடுவதாக அந்தத் துறைகள் இதை பார்க்கும். ஒவ்வொரு துறையிலும் உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்படுவதாகவும், வேலையிழப்புகள் அதிகரித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின்றன' என்று அதில் கூறியுள்ளார். மேலும், ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள பிரச்னை தொடர்பாக வெளியான செய்தியையும் தனது சுட்டுரைப் பதிவுடன் அவர் இணைத்துள்ளார்.
   இதேபோல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ சுட்டுரைப் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவில், "வாடகை வாகனங்களை மக்கள் அதிகமாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டதே ஆட்டோமொபைல் துறை சரிவடைந்ததற்கு காரணம் என்று கதை சொல்வதை மத்திய அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி அமலாக்கத்தில் குளறுபடி போன்றவையே இதற்குக் காரணம் என்பதை ஒப்புக் கொண்டு, அதற்கான தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.
   அத்துடன், ஊடகத் தகவல் ஒன்றும் அதில் பகிரப்பட்டுள்ளது. நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் ஆட்டோமொபைல் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் வெள்ளிக்கிழமை பேசும்போது, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும், ஏன் வாகன விற்பனை மந்த நிலையில் உள்ளது என்று கேட்டதாகவும், அதற்காக அவர் அங்கேயே கடுமையாக விமர்சிக்கப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் இருந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai