காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தடையுத்தரவுகள் நீக்கப்பட்டிருந்தபோதிலும் சனிக்கிழமை அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தடையுத்தரவுகள் நீக்கப்பட்டிருந்தபோதிலும் சனிக்கிழமை அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 இதுதொடர்பாக அவர்கள் மேலும் கூறியதாவது:
 காஷ்மீர் மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக அதிக அளவு மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டதால், ஆர்ப்பாட்டங்களுக்கு வழிவகுப்பதை தடுக்கும் வகையில் பதற்றம் நிறைந்த பகுதிகளில் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.
 வெள்ளிக்கிழமை தொழுகைகள் அமைதியான முறையில் நிறைவடைந்ததை அடுத்து, பல்வேறு பகுதிகளில் விதிக்கப்பட்டிருந்த தடையுத்தரவுகள் சனிக்கிழமை திரும்பப் பெறப்பட்டன.
 எனினும், சந்தைப் பகுதிகளும், வர்த்தக வளாகங்களும் மூடியே இருந்தன. பொதுப் போக்குவரத்து முழுமையாக இயங்காத நிலையில், தனியார் வாகனங்கள் மட்டும் ஆங்காங்கே சாலைகளில் இயங்கின. அரசு அலுவலகங்கள் திறந்திருந்த போதிலும், பொதுப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் ஊழியர்களின் வருகை குறைவாகவே இருந்தது. மாவட்டத் தலைநகரங்களில் உள்ள அலுவலகங்களில் பணியாளர்களின் வருகை வழக்கம்போல இருந்தது.
 அரசு முயற்சியின் பேரில் பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டிருந்தபோதும், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பெரும்பாலான பெற்றோர்கள் அவர்களை பள்ளிக்கு அனுப்பவில்லை. தரைவழி தொலைபேசி சேவைகள் மீண்டும் முழுமையாக செயல்பாட்டு வந்துவிட்டன. எனினும், 34-ஆவது நாளாக செல்லிடப்பேசி மற்றும் இணையதளச் சேவைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன என்று அந்த அதிகாரிகள் கூறினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com