ரூ.350 லட்சம் கோடி பொருளாதார இலக்கை எட்ட திட்டமிட்ட வியூகம் அவசியம் 

ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரமாக இந்தியாவை மாற்ற, நன்கு திட்டமிட்ட வியூகம் அவசியம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
ரூ.350 லட்சம் கோடி பொருளாதார இலக்கை எட்ட திட்டமிட்ட வியூகம் அவசியம் 

ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரமாக இந்தியாவை மாற்ற, நன்கு திட்டமிட்ட வியூகம் அவசியம் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.
 பொதுச் சேவை, ஆட்சி நிர்வாகம், பொருளாதாரம், தேசக் கட்டமைப்பு ஆகியவற்றில் மன்மோகன் சிங் ஆற்றிய பணிகளுக்காக அவருக்கு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜே.கே. லட்சுமிபத் பல்கலைக்கழகம் சனிக்கிழமை விருது வழங்கி கௌரவித்தது. விருதை ஏற்றுக் கொண்டு மன்மோகன் சிங் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது:
 தற்போது நமது பொருளாதாரம் சரிவைச் சந்தித்துள்ளது. உள்நாட்டு உற்பத்தி விகிதம் சரிந்து வருகிறது. முதலீட்டு விகிதத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் துயரில் உள்ளனர். வங்கிகள் நெருக்கடியைச் சந்திக்கின்றன. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. இந்தச் சூழலில் ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரமாக இந்தியாவை மாற்ற, நன்கு திட்டமிட்ட வியூகம் அவசியம்.
 வருமான வரித்துறையின் எதிர்மறையான போக்கை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். பொருளாதாரச் சீர்திருத்தங்களை தொடர்ந்து மேற்கொள்வதே இப்பேதைய அவசியத் தேவையாகும். ஜனநாயகத்தை வலுப்படுத்த நாட்டுக்கு கொள்கை ரீதியிலான, புத்திசாலித்தனமும், லட்சிய நோக்கமும் கொண்ட தலைவர்கள் தேவை.
 நாட்டின் அரசியல்சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விழுமியங்களைப் பாதுகாக்க அரசியல் கட்சிகள் உறுதிபூண வேண்டும். நமது ஒற்றுமை நீடித்திருக்க வேண்டுமானால், நீதி, சுதந்திரம், சமத்துவம், மாற்றுக் கருத்துகளை மதிக்கும் சூழல் ஆகியவற்றை அரசு உறுதிப்படுத்த வேண்டும். நாடாளுமன்றம் மற்றும் அதன் மரபுகள் ஆகியவற்றின் மாண்பு, அரசின் நெறிமுறைகள் ஆகியவை மதிக்கப்பட வேண்டும்.
 உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், தலைமைத் தணிக்கையாளர் அமைப்பு, சிபிஐ, ஊழல் கண்காணிப்பு ஆணையம், தகவல் ஆணையம் மற்றும் சிறப்பு ஆணையங்கள், அரசியல்சாசனத்துக்கு உட்பட்டு சுதந்திரமாக இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன என்றார் அவர்.
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com