சுடச்சுட

  
  925_kg_cannabis

  பறிமுதல் செய்யப்பட்ட 925 கிலோ கஞ்சா

   

  ஒரே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 925 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள படேரு மண்டலத்தில் ஒரு வீட்டில் அதிகளவிலான கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கலால் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

  இந்நிலையில், ஆய்வாளர் அனில் குமார் தலைமையிலான கலால் துறை தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டது. அப்போது ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 925 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

  இதையடுத்து நாகேஸ்வர ராவ் மற்றும் ஜெகன்னாத் ராவ் ஆகிய இருவரையும் இவ்விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநில கலால் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

  பறிமுதல் செய்யப்பட்ட மொத்த கஞ்சாவின் மதிப்பு ரூ.2 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai