என்னது..புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது ஐன்ஸ்டீனா? - நெட்டிசன்களின் கலாய்ப்புக்கு ஆளான மத்திய அமைச்சர்!

புவியீர்ப்பு விசையை கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணிதம் ஒருபோதும் உதவியதில்லை என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
என்னது..புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது ஐன்ஸ்டீனா? - நெட்டிசன்களின் கலாய்ப்புக்கு ஆளான மத்திய அமைச்சர்!

புவியீர்ப்பு விசையை கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணிதம் ஒருபோதும் உதவியதில்லை என்று மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆட்டோமொபைல் துறை கடும் பின்னடைவை சந்தித்திருக்கிறது. வரலாறு காணாத அளவுக்கு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 5% ஆக குறைந்துள்ளது. பொருளாதார மந்தநிலையை  சரிசெய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

மேலும், பொருளாதார நிலை குறித்து விளக்கமளித்த அவர்,  ஆட்டோமொபைல் துறை கடும் பின்னடைவை சந்தித்ததற்கு ஒலா, உபர் போன்ற செல்போன் செயலிகள் மூலம் இயங்கும் வாடகைக் கார் நிறுவனங்களும் காரணமாக இருக்கின்றன என்று தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் வைரலாக பரவி வருகின்றன. 

இந்த வரிசையில் தற்போது மத்திய ரயில்வே மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயலும் இணைந்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், '5 ட்ரில்லியன் டாலர் என்ற பொருளாதாரத்தை நோக்கியே நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அதற்கு 12% பொருளாதார வளர்ச்சி தேவை. ஆனால், ஜிடிபி குறித்து நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. தொலைக்காட்சியில் வரும் தகவல்களை வைத்து பொருளாதாரத்தை கருத்தில்கொள்ள வேண்டாம்.

புவியீர்ப்பு விசையை கண்டுபிடிக்க ஐன்ஸ்டீனுக்கு கணிதம் ஒருபோதும் உதவியதில்லை. எனவே, இதனை நீங்கள் கணக்கில் கொள்ளாதீர்கள்' என்று பேசினார்.

அதாவது,  புவியீர்ப்பு விசையை கண்டுபிடித்தது ஐசக் நியூட்டன்; சார்பியல் கோட்பாடை கண்டுபிடித்தவர் தான் ஐன்ஸ்டீன் என்று கூட தெரியாமல் அமைச்சர் இவ்வாறு பேசியதை வைத்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com