பத்ம விருதுகளுக்கு சாதனையாளர்களை பரிந்துரைக்க அமித் ஷா வலியுறுத்தல்

பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெறத் தகுதியுடைய சாதனையாளர்களை பரிந்துரைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டு மக்களை புதன்கிழமை வலியுறுத்தினார். 
பத்ம விருதுகளுக்கு சாதனையாளர்களை பரிந்துரைக்க அமித் ஷா வலியுறுத்தல்


பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகளைப் பெறத் தகுதியுடைய சாதனையாளர்களை பரிந்துரைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டு மக்களை புதன்கிழமை வலியுறுத்தினார். 

இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியிருந்ததாவது: 
கலை, அறிவியல், சமூகப் பணி, விளையாட்டு என, தான் சார்ந்த துறைகளில் சிறப்பாகச் செயல்பட்டு சாதனை புரிந்த தனிநபர்களை பத்ம விருதுகளுக்காக மக்கள் பரிந்துரைக்கலாம். மதிப்பு மிக்க பத்ம விருதுகளை மக்களின் பத்ம விருதுகள் என்பதாக மாற்ற பிரதமர் மோடி உறுதி பூண்டுள்ளார். 

2020-ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்காக இதுவரை ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கிடைக்கப் பெற்றுள்ளன என்று அமித் ஷா அந்தப் பதிவில் கூறியிருந்தார். 

மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் அளித்துள்ள தகவலின்படி, 2020-ஆம் ஆண்டு பத்ம விருதுகள் பெறுவதற்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை சுமார் 25,000 பரிந்துரைகளும், விண்ணப்பங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன. 

மேற்கொண்டு பரிந்துரைகள், விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 15 ஆகும். விருதுக்கு தேர்வானவர்கள் பட்டியல் அடுத்த ஆண்டு குடியரசு தினத்தின்போது அறிவிக்கப்படும். 
கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப் பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப் பணிகள், வர்த்தகம், தொழில்துறை போன்றவற்றில் சாதனை புரிந்தவர்களுக்காக பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. இனம், ஜாதி, பணி, பாலினம் ஆகிய வேறுபாடுகளின்றி இந்த விருதுகளுக்கான சாதனையாளர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 
பிரதமர் தலைமையிலான பத்ம விருதுகள் தேர்வுக் குழு, விருதுக்கு தகுதியுடைய நபர்களை தேர்வு செய்கிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com