ஐசிஐசிஐ வங்கிக்கு செபி ரூ.12 லட்சம் அபராதம்

ராஜஸ்தான் வங்கியுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை பங்குச்சந்தைக்கு தாமதமாகத் தெரிவித்ததற்காக, ஐசிஐசிஐ வங்கிக்கு இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியம் (செபி) ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.


ராஜஸ்தான் வங்கியுடன் மேற்கொண்ட ஒப்பந்தத்தை பங்குச்சந்தைக்கு தாமதமாகத் தெரிவித்ததற்காக, ஐசிஐசிஐ வங்கிக்கு இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியம் (செபி) ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இதுகுறித்து பங்குச் சந்தைகளைக் கட்டுப்படுத்தும் செபி அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ராஜஸ்தான் வங்கிக்கும், ஐசிஐசிஐ வங்கிக்கும் இடையே கடந்த 2010-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி ஓர் ஒப்பந்தம் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தப்படி, ராஜஸ்தான் வங்கியின் முக்கியப் பங்குதாரர்கள் ஐசிஐசிஐ வங்கியுடன் சேர்க்கப்பட்டனர். இந்த ஒப்பந்தம், 2010-ஆம் ஆண்டு மே மாதம் 18-ஆம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கையெழுத்தானது. ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தான விவரத்தை அன்றைய தினம் இரவு 8.30 மணிக்கு செபிக்கு ஐசிஐசிஐ வங்கி தெரிவித்தது. அதாவது, பங்குச் சந்தை தொடங்குவதற்கு முன்பே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்த தகவலை 18-ஆம் தேதி பங்குச்சந்தை நிறைவடைந்த பிறகே செபிக்கு ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் தெரிவித்தது. மிக முக்கியமான இந்த ஒப்பந்தம் குறித்த விவரங்களை ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் உடனடியாக செபிக்கு தெரிவித்திருக்க வேண்டும்.
ஒப்பந்தம் கையெழுத்தான விவரத்தை ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் ஒரு வர்த்தக நாள் முழுவதும் தெரிவிக்காமல் இருந்ததால், அன்றைய நாள் முழுவதும் பொதுமக்களுக்கு ஒப்பந்தம் குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை.
இதன் மூலம், ஒப்பந்த விதிகளையும், வர்த்தக விதிகளையும் ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் மீறிவிட்டது. எனவே, அந்த வங்கிக்கு ரூ.10 லட்சமும், விதிகளை மீறி செயல்பட்ட அதிகாரி சந்தீப் பத்ராவுக்கு ரூ.2 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com