ஜெ.பி.நட்டா-சீனத் தூதர் சந்திப்பு

பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டாவை மரியாதை நிமித்தமாக இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வெய்டாங் சந்தித்தார்.
ஜெ.பி.நட்டா-சீனத் தூதர் சந்திப்பு


பாஜக செயல் தலைவர் ஜெ.பி.நட்டாவை மரியாதை நிமித்தமாக இந்தியாவுக்கான சீனத் தூதர் சுன் வெய்டாங் சந்தித்தார்.
அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவு குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக பாஜகவின் விஜய் சௌதாய்வாலே தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பாஜகவினரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். சீனத் தூதரிடம் வர்த்தகம் தொடர்பான சில விஷயங்களை சீனா திருத்திக் கொள்ள வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டது என்றார். 
அண்மையில், பாஜக தலைவர்கள் அடங்கிய குழு ஒன்று, சீனா சென்று கம்யூனிஸ்ட் தலைவர்களைத் சந்தித்தது. அரசு அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com