சீனாவுடனான எல்லையை தெளிவாக வரையறுக்க வேண்டும்: பாஜக எம்.பி. வலியுறுத்தல்

"இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பகுதி தெளிவாக வரையறுக்கப்படாததே இருநாட்டு ராணுவத்தினருக்கு இடையே ஏற்படும் சச்சரவுகளுக்குக் காரணம்; எனவே, சீனாவுடனான எல்லையை தெளிவாக
சீனாவுடனான எல்லையை தெளிவாக வரையறுக்க வேண்டும்: பாஜக எம்.பி. வலியுறுத்தல்

"இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையேயான எல்லைப் பகுதி தெளிவாக வரையறுக்கப்படாததே இருநாட்டு ராணுவத்தினருக்கு இடையே ஏற்படும் சச்சரவுகளுக்குக் காரணம்; எனவே, சீனாவுடனான எல்லையை தெளிவாக வரையறுக்க வேண்டும்' என்று லடாக் தொகுதி பாஜக எம்.பி. ஜாம்யாங் சேரிங் நமங்யால் வலியுறுத்தியுள்ளார்.
கிழக்கு லடாக்கின் பாங்காங் டசோ ஏரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவது தொடர்பாக, இந்தியா, சீனா ராணுவ வீரர்களிடையே கடந்த புதன்கிழமை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இருதரப்பு அதிகாரிகள் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, அன்றைய தினமே பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டதாக இந்திய ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக லடாக் எம்.பி. ஜாம்யாங் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:
இது தீவிரமான பிரச்னை இல்லை. இது குறித்து கவலைப்படத் தேவையில்லை. இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப் பகுதி தெளிவாக வரையறுக்கப்படாமல் இருப்பதே, பிரச்னைகளுக்குக் காரணமாக உள்ளது. எனவே, இருநாடுகளும் ஒன்றாக இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எல்லைக் கோட்டு பகுதியை தெளிவாக வரையறை செய்ய வேண்டும். மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் எல்லை தாண்டி செல்லும்போது உள்ளூர் அளவில் சில பதற்றமான சம்பவங்கள் நடைபெறுகின்றன என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com