ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைவிட பாகிஸ்தான் தயாராக வேண்டும்: குஜராத் முதல்வர் எச்சரிக்கை

ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைவிட பாகிஸ்தான் தாயாரக இருக்க வேண்டும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி எச்சரித்துள்ளார். 
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி | கோப்புப் படம்
குஜராத் முதல்வர் விஜய் ரூபானி | கோப்புப் படம்

ஆக்கிரமிப்பு காஷ்மீரை கைவிட பாகிஸ்தான் தாயாரக இருக்க வேண்டும் என்று குஜராத் முதல்வர் விஜய் ரூபானி எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக ஒரே இந்தியா பேரணியில் கலந்துகொண்ட போது அவர் பேசியதாவது:

1971-ஆம் ஆண்டு வங்கதேச தனிநாட்டுக்காக நடைபெற்ற போரை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால் அந்த நேரத்தில் தில்லியைக் கைப்பற்ற பாகிஸ்தான் பகல் கனவு கண்டுகொண்டிருந்தது. ஆனால், கராச்சி இரண்டாக உடைக்கப்பட்டு வங்கதேசம் எனும் தனி நாடு உருவானது. இதில் பாகிஸ்தான் ராணுவம் நம்மிடம் சரணடைந்தது.

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டுவிட்டது. ஒன்றுபட்ட இந்தியாவை நோக்கி நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். அதனால் தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரும் இந்தியாவுக்கு தான் சொந்தமாகும். எனவே அதை கைவிட பாகிஸ்தான் தயாராக இருக்க வேண்டியது அவசியமாகும். 

அதேபோன்று பயங்கரவாதத்துக்கு ஆதரவளித்து, ஊக்குவிப்பதையும் பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும். இனியும் பயங்கரவாதத்தை இந்தியாவால் பொறுத்துக்கொள்ள முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com