கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து தேர்வுகளுக்கும் மலையாளத்தில் வினாத்தாள்கள்

கேரள அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் (கேபிஎஸ்சி) மூலமாக நடத்தப்படும் அனைத்து தேர்வுகளுக்கும் ஆங்கிலத்துடன் சேர்த்து மலையாளத்திலும் வினாத்தாள்கள் அமைக்கப்படும் என்று அந்த மாநில அரசு
கேரள அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அனைத்து தேர்வுகளுக்கும் மலையாளத்தில் வினாத்தாள்கள்

கேரள அரசுப் பணியாளர் தேர்வாணயத்தின் (கேபிஎஸ்சி) மூலமாக நடத்தப்படும் அனைத்து தேர்வுகளுக்கும் ஆங்கிலத்துடன் சேர்த்து மலையாளத்திலும் வினாத்தாள்கள் அமைக்கப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது.
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் அனைத்தும் தாய்மொழியில் (மலையாளம்) நடத்தப்பட வேண்டும் என்று "ஐக்கிய மலையாள பிரஸ்தானம்' என்ற அமைப்பு கடந்த ஒரு மாதமாக போராட்டத்தில் ஈடுபட்டது. அதையடுத்து, அரசுத் தேர்வுகளில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தில் தேர்வாணையத்தின் தலைவர் எம்.கே. சகீர், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினர்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பினராயி விஜயன் கூறியதாவது:
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் நடத்தப்படும் மாநில குடிமைப் பணித் தேர்வு உள்பட அனைத்து தேர்வுகளிலும், ஆங்கிலத்துடன் சேர்த்து மலையாளத்திலும் வினாத்தாள்களை அமைக்க வேண்டும் என்று மாநில அரசு பரிந்துரைத்தது. அதை தேர்வாணையம் ஏற்றுக் கொண்டது. 
எனினும், தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு மலையாளத்தில் வினாத்தாள்கள் அமைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து தேர்வாணையத் தலைவர் விளக்கினார். இதுதொடர்பாக மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்களுடன் ஆலோசித்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தொழில்நுட்பத் தேர்வுகளுக்கு மலையாளத்தில் வினாத்தாள் தயாரிப்பதில் தேர்வாணையத்துக்கு பல்கலைக்கழகங்கள் உதவி புரியும். 
தொழில்நுட்ப வார்த்தைகளை மலையாளத்துக்கு மொழிபெயர்ப்பதை மேற்பார்வையிடுவதற்கு உயர்நிலைக் குழு நியமிக்கப்படும். தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் 90 சதவீத தேர்வுகளில் ஆங்கிலத்துடன் சேர்த்து மலையாளத்திலும் வினாத்தாள்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில தேர்வுகள் மட்டுமே ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன. அதை மாற்றுவதற்கு தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com