அஸ்திரா ஏவுகணைச் சோதனை வெற்றி

வானில் இருக்கும் இலக்குகளை வானில் இருந்தபடியே தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை செவ்வாய்க்கிழமை வெற்றியடைந்தது. இந்த ஏவுகணை முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது
ஒடிஸா மாநிலம், பாலாசோர் கடற்கரைப் பகுதியின் வான்பரப்பில் சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த அஸ்திரா ஏவுகணை.
ஒடிஸா மாநிலம், பாலாசோர் கடற்கரைப் பகுதியின் வான்பரப்பில் சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த அஸ்திரா ஏவுகணை.


வானில் இருக்கும் இலக்குகளை வானில் இருந்தபடியே தாக்கி அழிக்கும் அஸ்திரா ஏவுகணை சோதனை செவ்வாய்க்கிழமை வெற்றியடைந்தது. இந்த ஏவுகணை முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டது பெருமைக்குரியதாகும்.

ஒடிஸா மாநிலம், பாலாசோர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அஸ்திரா ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) மூலம் முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இந்த அஸ்திரா ஏவுகணை, நிர்ணயித்த இலக்கை துல்லியமாக தாக்கி அழித்தது. 

இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

வானில் உள்ள இலக்குகளை வானில் இருந்தபடியே குறி வைத்து தாக்கும் அஸ்திரா ஏவுகணை, சுகோய்-30 எம்கேஐ ரக போர் விமானம் மூலமாக செவ்வாய்க்கிழமை விண்ணில் ஏவப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை இந்த ஏவுகணை துல்லியமாக தாக்கி அழித்ததையடுத்து இந்தச் சோதனை வெற்றியடைந்துள்ளது. 

மணிக்கு 5,555 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணை, 70 கி.மீ தொலைவில் உள்ள இலக்குகளையும் குறி வைத்து துல்லியமாக தாக்கும் வல்லமையுடையது. வெவ்வேறு உயரத்தில் உள்ள இலக்குகளையும் தாக்கி அழிக்கும் திறனை இது கொண்டுள்ளது. அஸ்திரா ஏவுகணைச் சோதனை வெற்றியடைந்ததற்கு, டிஆர்டிஓ விஞ்ஞானிகள் மற்றும் ஏவுகணை தயாரிப்பு திட்டத்தில் இருந்த பணியாளர்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்புத் துறையை பலப்படுத்துவதற்காக வெளிநாடுகளில் இருந்து ராணுவ தளவாடங்கள், ஆயுதங்களை கொள்முதல் செய்து வரும் இந்தியா, அதேவேளையில் உள்நாட்டிலேயே ஏவுகணைகள் மற்றும் புதுரக ஆயுதங்களைத் தயாரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com