இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டம்: மத்திய அரசு பிறப்பித்தது

இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு வியாழக்கிழமை பிறப்பித்தது. முன்னதாக, இந்த முடிவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டம்: மத்திய அரசு பிறப்பித்தது


இ-சிகரெட்டுக்கு தடை விதிக்கும் அவசரச் சட்டத்தை மத்திய அரசு வியாழக்கிழமை பிறப்பித்தது. முன்னதாக, இந்த முடிவுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதன்படி, இந்தியாவில் இ-சிகரெட் தயாரிப்பு, இறக்குமதி, ஏற்றுமதி, விநியோகம், விற்பனை,  இ-சிகரெட் சார்ந்த புகைப் பிடிக்கும் கருவிகள் தொடர்பான விளம்பரங்கள் ஆகிவற்றை வெளியிடுவது தண்டனைக்குரிய குற்றமாகும். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு முதல் முறை ரூ.1 லட்சம் அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்படும். இரண்டாவது முறையாக அதே தவறைச் செய்தால் 3 ஆண்டு சிறையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும்.
அதேபோல இ-சிகரெட் வைத்திருந்தால் ரூ.50,000 அபராதம் அல்லது 6 மாதம் சிறை அல்லது இவை இரண்டும் சேர்ந்து விதிக்கப்பட வாய்ப்புள்ளது. இது தவிர இ-சிகரெட் வைத்திருப்பதாகவோ, உற்பத்தி செய்வதாகவோ சந்தேகம் எழுந்தால் சோதனை நடத்தவும் அதிகாரிகளுக்கு இந்த அவசரச் சட்டம் மூலம் அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு முன்பு இ-சிகரெட் வைத்திருப்பதாக சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்த முடியாது என்ற நிலை இருந்தது.
இப்போது கைவசம் இ-சிகரெட்டுகளை இருப்பு வைத்திருப்பவர்கள், அது தொடர்பான முழு விவரத்தையும் அதிகாரிகளிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனினும், இப்போது இ-சிகரெட் விநியோகஸ்தர்கள், விற்பனையாளர்கள் மற்றும் பயன்படுத்துவோர் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பெரிய அளவில் லாபம் சம்பாதித்து வரும் சாதாரண வகை சிகரெட் தயாரிப்பாளர்களை ஆதரிக்கும் நோக்கத்திலேயே மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இ-சிகரெட் பிரபலமானால், அவர்களது வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படும். எனவேதான் இ-சிகரெட்டை மத்திய அரசு உள்நோக்கத்துடன் தடை செய்துள்ளது என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com