ஆந்திராவில் ரூ.13 கோடி மதிப்பிலான 63 ஆயிரம் கிலோ கஞ்சா அழிப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் ரூ.13 கோடி மதிப்பிலான 63 ஆயிரம் கிலோ கஞ்சா வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டது.
ஆந்திராவில் ரூ.13 கோடி மதிப்பிலான 63 ஆயிரம் கிலோ கஞ்சா அழிப்பு

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணத்தில் ரூ.13 கோடி மதிப்பிலான 63 ஆயிரம் கிலோ கஞ்சா வெள்ளிக்கிழமை அழிக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு காலகட்டங்களில் 13 காவல்நிலையங்களில் பதியப்பட்ட 455 வழக்குகள் தொடர்பாக பறிமுதல் செய்யப்பட்டிருந்த மொத்த கஞ்சாவும் அழிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், விசாகப்பட்டிணத்தில் அமைந்துள்ள காபுலுப்பட்டா குப்பைக் கிடங்கில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த ரூ.13 கோடி மதிப்பிலான மொத்தம் 63,879 கிலோ கஞ்சாவை விசாகப்பட்டிணம் போலீஸார் மாநில அரசின் அனுமதி பெற்று அழித்தனர். அப்போது போதை ஒழிப்புத்துறையினரும் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com