உச்ச நீதிமன்றத்தின் 4 புதிய நீதிபதிகள் இன்று பதவியேற்பு
By DIN | Published on : 23rd September 2019 02:34 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட 4 புதிய நீதிபதிகள் திங்கள்கிழமை (செப்.23) பதவியேற்றனர். புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் அவர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கினார்.
ஹிமாச்சலப்பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ராமசுப்ரமணியன்
பஞ்சாப்-ஹரியாணா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ண முராரி
ராஜஸ்தான் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரவீந்திர பட்
கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய்
ஆகிய நால்வருக்கும் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 31-ல் இருந்து 34-ஆக உயர்ந்தது.
ஏற்கெனவே, தமிழகத்தைச் சேர்ந்த பானுமதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ள நிலையில், ராமசுப்பிரமணியன் பதவியேற்பதையடுத்து தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை உச்ச நீதிமன்றத்தில் இரண்டாக உயர்ந்துள்ளது.