ஐ.என்.எக்ஸ் வழக்கில் இந்திராணி முகர்ஜி கூறுவது நம்பத் தகுந்ததாக இல்லை: ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறியதாக கூறப்படும் தகவல்கள் நம்பத் தகுந்ததாக இல்லை என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
ஐ.என்.எக்ஸ் வழக்கில் இந்திராணி முகர்ஜி கூறுவது நம்பத் தகுந்ததாக இல்லை: ப.சிதம்பரம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் இந்திராணி முகர்ஜியின் கூற்றுகள் நம்பத் தகுந்ததாக இல்லை என்று திஹார் சிறையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சட்டவிரோத பணபரிமாற்றத்தில் உதவியதாகக் கூறி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த வழக்கில் ப.சிதம்பரம் கடந்த மாதம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கின் உரிமையாளரான இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜி  ஏற்கனவே கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், ப.சிதம்பரத்தின் மீதான வழக்கில், சிறையில் இருக்கும் இந்திராணி முகர்ஜியிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். இந்த வழக்கில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்ததாக சிபிஐ தகவல் தெரிவித்தது. 

தற்போது திஹார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரம் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், இந்திராணி முகர்ஜி தொடர்பான  கூற்றுகள் நம்பத் தகுந்ததாக இல்லை என்று தெரிவித்துள்ளார். 

டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ள விளக்க மனுவில், 'ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சிபிஐ-யிடம் எந்த ஆதாரமும் இல்லை. விசாரணையின் போது நான் சரியாக ஒத்துழைக்கவில்லை என்றும் அடிப்படைக் கேள்விகளுக்கு கூட பதிலளிக்கவில்லை என்றும் சிபிஐ கூறுவது தவறு. அதேபோன்று  ஜாமீன் வழங்கினால் சிதம்பரம் வெளிநாடு சென்று விடுவார் என்று கூறுவதும் தவறானது. எனக்கு ஜாமீன் வழங்கினாலும் நான் வெளிநாடு செல்ல மாட்டேன்' என்று கூறியுள்ளார். 

மேலும், இந்த வழக்கில் அப்ரூவராக மாறியுள்ளதாகக் கூறப்படும் இந்திராணி முகர்ஜியின் கூற்றுகள் நம்பத் தகுந்ததாக இல்லை' என்றும் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக,  தில்லியில் திஹார் சிறையில் கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் சிதம்பரத்தை இன்று சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com