மூன்று மனைவிகள்; 15 குழந்தைகள்..இன்னும் வேண்டுமாம்! - உ.பியில் ஒரு விநோத குடும்பம்

உத்தரப்பிரதேச மாநிலம் பவுதியான் காலன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முஹம்மத் ஷெரிப். இவருக்கு மூன்று மனைவிகள் மற்றும் 15 குழந்தைகள் உள்ளனர்.
மூன்று மனைவிகள்; 15 குழந்தைகள்..இன்னும் வேண்டுமாம்! - உ.பியில் ஒரு விநோத குடும்பம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹேரி(Kheri) மாவட்டம் பவுதியான் காலன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முஹம்மத் ஷெரிப். இவருக்கு மூன்று மனைவிகள் மற்றும் 15 குழந்தைகள் உள்ளனர். மேலும், குழந்தைகளை பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் இவர் கூறியுள்ளார். 

ஷெரிப், தனது 14 வயதில் 1987ம் ஆண்டு ஜெத்தா பேகம் என்பவரை முதலாவதாக திருமணம் செய்துகொண்டார். இவருக்கு மூன்று மகன்கள், ஐந்து மகள்கள். அதன்பின்னர் 1990ல் நூர் என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்தார். இவருக்கு 4 மகள்கள் மற்றும் ஒரு மகன். 

மூன்றாவதாக, 2000ம் ஆண்டில் தரன்னம் பேகம் என்ற நேபாளப் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். 

மொத்தமாக ஷெரிப்பிற்கு மூன்று மனைவிகள் மூலமாக 15 குழந்தைகள் இருக்கின்றனர். இதில் ஆச்சரியமான விஷயங்கள் என்னவென்றால், மூன்று மனைவிகளும், 15 குழந்தைகளுடன் ஷெரிப் ஒரே வீட்டில் வசிக்கிறார். அதேபோன்று 15 குழந்தைகளின் பெயர்கள் கூட ஷெரிப்பிற்கு சரியாகத் தெரியாதாம்.

ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வந்தவுடன் மாலை அல்லது இரவு, எண்ணிக்கை அடிப்படையிலேயே அனைத்து குழந்தைகளும் இருக்கிறதா என்று சரிபார்த்துக்கொள்வார். அவரது மூத்த மகனின் வயது 24, கடைசி மகளின் வயது 2 ஆகும். மற்றவர்கள் இதற்கிடைப்பட்ட வயதினைக் கொண்டவர்கள். 

இதுகுறித்து ஷெரிப் கூறும்போது, 'அல்லா எனக்கு இவ்வளவு அழகான ஒரு குடும்பத்தை கொடுத்திருக்கிறார். மூன்று மனைவிகளும் ஒற்றுமையாக இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மாவட்டத்திலேயே எங்களது குடும்பம் தான் மிகப்பெரியது. 

நான் விவசாயம் செய்து வருகிறேன். அல்லாவின் அருளால் இதுவரை குழந்தைகள் பசியுடன் இருந்ததில்லை' என்று தெரிவித்துள்ளார். 

மேலும், மூன்று மனைவிகளுக்கும் தனித்தனியே வீடு கட்டுவதற்கு பிரதான் மந்திரி அவாஸ் யோஜனாவின் கீழ் மூன்று மனைவிகளின் பெயர்களிலும் விண்ணப்பித்துள்ளார். 

குடும்பக் கட்டுப்பாடு குறித்து மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வரும் நிலையில் ஷெரிப் அதுகுறித்து தனக்கு தெரியாது என்று கூறுகிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com