குடும்பத்தை உருவாக்கச் சொன்னால் கிராமத்தை உருவாக்கி வைத்தவர் இவர்!

மூன்று திருமணம் செய்து பதினைந்து குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்துவரும் நபர் ஒருவர் குறித்த சுவராஸ்ய  தகவல் வெளியாகியுள்ளது.
உ.பியில் பெரிய குடும்பம்
உ.பியில் பெரிய குடும்பம்

லக்கிம்பூர் (உ.பி): மூன்று திருமணம் செய்து பதினைந்து குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்துவரும் நபர் ஒருவர் குறித்த சுவராஸ்ய  தகவல் வெளியாகியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம் பவுதியன் கலன்  கிராமத்தைச் சேர்ந்தவர் முஹம்மத் ஷெரிப் (48). விவசாயக் கூலியாக பணியாற்றி வரும் இவர்தான் இதுவரை மூன்று பேரைத்  திருமணம் செய்து, அவர்கள் மூலம் 15 குழந்தைகளைப் பெற்று அந்த மாவட்டத்திலேயே பெரிய குடும்பம் என்ற பெருமையுடன் ஒரே வீட்டிலேயே வசித்து வருகிறார்கள்.   

இந்நிலையில் தனது பெரிய குடும்பம் குறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:

1987-ஆம் ஆண்டு எனக்கு 14 வயதிருக்கும் போது ஜட்டா பேகம் என்பவருடன் எனக்கு முதலில் திருமணம் நடந்தது. அவர்மூலம் மூன்று பையன்களும் ஐந்து பெண்களும் பிறந்தார்கள். பின்னர் 90-களில் நூர் என்பவரைச் சந்தித்து அவரை விரும்பி திருமணம் செய்து கொண்டேன். அவர் மூலம் எனக்கு  நான்கு பெண்களும் ஒரு பையனும் பிறந்தார்கள்.

பின்னர் 2000-ஆம் ஆண்டில் தரன்னும் பேகம் என்னும் நேபாளியப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டேன்.  அவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை பிறந்துள்ளது.

எனக்கு எல்லா குழந்தைகளின் பெயரும் ஞாபகம் இருக்காது. எனவே தினசரி மாலைகளில் தலைகளை எண்ணி  கணக்கிட்டு அனைவரும் வீட்டில் இருப்பதை உறுதி செய்து கொள்வேன்.

இப்படி ஒரே வீட்டில் அனைவரும் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்பது எனக்கு கிடைத்த வரம். பெரும்பாலும் எனகு கூலிக்குப் பதிலாக தானியங்கள் கிடைக்கும். அதை வைத்து குடும்பம் ஓடுகிறது.

குழந்தைகள் என்பது கடவுள் கொடுத்த வரம். எனக்கு இன்னும் அதிக குழந்தைகள் இருந்தால் மிகுந்த சந்தோஷமாக இருப்பேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com