எந்த ஒரு மொழியையும் திணிக்கவும் கூடாது; எதிர்க்கவும் கூடாது: வெங்கையா நாயுடு பேச்சு!

எந்த ஒரு மொழியையும் திணிக்கவும் கூடாது; எதிர்க்கவும் கூடாது என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு மொழியையும் திணிக்கவும் கூடாது; எதிர்க்கவும் கூடாது: வெங்கையா நாயுடு பேச்சு!

எந்த ஒரு மொழியையும் திணிக்கவும் கூடாது; எதிர்க்கவும் கூடாது என்று குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கேரளாவில் நடந்த விழா ஒன்றில் பேசியுள்ளார்.

மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு, கேரளாவில் பிரபல ஆயுர்வேத நிபுணர் வைத்யரத்னம் பி.எஸ்.வாரியரின் 150 வது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டு பேசினார். வைத்யரத்னம் பி.எஸ். வாரியர் , கோட்டக்கல்லில் உள்ள ஆர்ய வைத்ய சாலையை தோற்றுவித்தவர் ஆவார்.

நிகழ்ச்சியில் பேசிய வெங்கையா நாயுடு, 'நம் நாட்டில் எந்த ஒரு மொழிக்கும் இட ஒதுக்கீடு என்பது தேவையில்லை. அனைத்து மொழிகளுமே சிறந்தவை தான். இந்தியாவில் உள்ள குழந்தைகள் பன்மொழியை கற்றுக்கொள்ள வேண்டும். அவர்கள் பல்வேறு மொழிகளைக் கற்றுக்கொள்ள நாம் அனுமதிக்க வேண்டும். மொழி விவகாரத்தில் சமீபத்தில் ஒரு சர்ச்சை ஏற்பட்டது. நான் இந்த நேரத்தில் ஒரு கருத்தை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். மொழி விஷயத்தில் எந்தவிதமான திணிப்பும், எதிர்ப்பும் இருக்கக்கூடாது' என்று பேசியுள்ளார். 

முன்னதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாடு முழுவதும் ஒரே மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்று கூறியிருந்தது தென் இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின்னர், தனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளதாகவும், தாய் மொழிக்கு பின்னர் இரண்டாவது மொழியாக ஹிந்தி இருக்க வேண்டும் என்றும் அமித் ஷா அதற்கு விளக்கம் கொடுத்தார். அமித் ஷாவின் கருத்துக்கு கேரளாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியும் தனது கண்டனத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com