வருங்கால வைப்பு நிதிக்கு 8.65% வட்டி: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளுக்கு (பிஎஃப்)  8.65 சதவீதம் வட்டி வழங்க மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதிக்கு 8.65% வட்டி: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக் கணக்குகளுக்கு (பிஎஃப்)  8.65 சதவீதம் வட்டி வழங்க மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 2017-18 நிதியாண்டில் தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு 8.55 சதவீத வட்டி வழங்கப்பட்டது. இந்த நிலையில், 2018-19 நிதியாண்டுக்கு 8.65 சதவீத வட்டி வழங்க கடந்த பிப்ரவரி மாதம் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு மத்திய நிதியமைச்சகம் கடந்த 19-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், அதற்கான அறிவிக்கையை மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.
வருங்கால வைப்பு நிதிக்குக் கூடுதல் வட்டி வழங்கப்பட்டுள்ளதன் மூலம் 6 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைய உள்ளனர். இது தொடர்பாக, மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் வெளியிட்ட அறிக்கையில், ""தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்குக் கூடுதல் வட்டி வழங்குவதற்கான அறிவிக்கையை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இதன் மூலம் 6 கோடிக்கும் அதிகமான தொழிலாளர்கள் பயனடைய உள்ளனர். இதனால், அரசுக்கு ரூ.54,000 கோடி செலவாகும்'' என்று குறிப்பிட்டிருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com