சின்மயானந்த் பாலியல் குற்றச்சாட்டு வழக்கு: சட்டக் கல்லூரி மாணவியின் ஜாமீன் மனு நிராகரிப்பு

பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்த் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டிய, சட்டக் கல்லூரி மாணவியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்த் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டிய, சட்டக் கல்லூரி மாணவியின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

பாஜக முன்னாள் அமைச்சர் சுவாமி சின்மயானந்த் அறக்கட்டளை நடத்தும் சட்டக் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர், சுவாமி சின்மயானந்த் கடந்த ஒரு வருடமாக தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார். இதன்பிறகு, அந்தப் பெண்ணின் தந்தை அளித்த புகாரின்பேரில், சின்மயானந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, தன்னை மிரட்டிப் பணம் பறிக்க முயன்றதாக சின்மயானந்த் தரப்பிலும் அந்த மாணவி மீது புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், சட்டக் கல்லூரி மாணவரி இன்று சிறப்பு புலனாய்வுக் குழுவால் (எஸ்ஐடி) கைது செய்யப்பட்டார். சிறப்பு புலனாய்வுக் குழுத் தலைவர் நவீன் அரோரா இதுகுறித்து தெரிவிக்கையில், சின்மயானந்திடம் இருந்து 5 கோடி ரூபாய் கேட்டு மிரட்டியதற்கான போதிய ஆதாரம் இருப்பதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த அந்தப் பெண்ணின் மனுவை உள்ளூர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

சின்மயானந்த் தரப்பு வழக்கறிஞர் மகேந்திர சிங் தெரிவிக்கையில், "இந்த வழக்கில் எந்தவொரு முகாந்திரமும் இல்லாமல் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஜாமீன் கோரியுள்ளனர். அவர்தான் அந்தக் கூட்டத்துக்கான தலைவர். இதை மனதில் கொண்டே, அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது" என்றார். மேலும், எஸ்ஐடி முன்வைத்த கோரிக்கையின் பேரில் அவரை 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com