கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதிக்கு மாற்றம் 

கர்நாடகாவில் 15 சட்டப்தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
கர்நாடகாவில் 15 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதிக்கு மாற்றம் 

கர்நாடகாவில் 15 சட்டப்தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

எச்.டி.குமாரசாமி தலைமையிலான மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு மீது அதிருப்தி அடைந்திருந்த 14 காங்கிரஸ், 3 மஜத எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்தனர். இதனிடையே, 17 எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதங்களை நிராகரித்திருந்த அப்போதைய பேரவைத் தலைவர் கே.ஆர்.ரமேஷ்குமார், கட்சித் தாவல் சட்டத்தின்கீழ் 17 பேரின் எம்.எல்.ஏ.  பதவிகளையும் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். இதன் விளைவாக, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழ்ந்தது. 

224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் 17 எம்.எல்.ஏ.க்களின் பதவியை தகுதிநீக்கம் செய்ததைத் தொடர்ந்து,  பாஜகவின் பலம் 105, காங்கிரஸின் பலம் 66, மஜதவின் பலம் 34-ஆகக் குறைந்தது.  இக் கட்சிகளைத் தவிர,  பகுஜன் சமாஜ் கட்சிக்கும், சுயேச்சைக்கும் தலா ஓர் இடம் உள்ளது. 207 பேர் கொண்ட சட்டப்பேரவையில் 104 இடங்கள் இருந்தால் ஆட்சி அமைக்கலாம் என்பதால், எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு அமைக்கப்பட்டது. இதனிடையே, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் பேரவைத் தலைவர் பிறப்பித்துள்ள ஆணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். 

இந்நிலையில் கர்நாடகாவில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 11ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற இருந்த இடைத்தேர்தலை டிசம்பர் 5ஆம் தேதிக்கு மாற்றம் செய்து தேர்தல் ஆணையம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com