மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டது.
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் (கோப்புப்படம்)
மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் அசோக் சவான் (கோப்புப்படம்)


மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டது.

மகாராஷ்டிராவில் அக்டோபர் 21-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதன் வாக்குகள் அக்டோபர் 24-ஆம் தேதி எண்ணப்படுகிறது. இதில், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. தொகுதி உடன்பாட்டின்படி இரண்டு கட்சிகளும் தலா 125 இடங்களில் போட்டியிடுகின்றன. 

இதற்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் கடந்த வாரமே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு தொகுதியில் போட்டியிட நிறைய பேர் ஆர்வம் காட்டுவதால், ஒரு சில இடங்களில் கட்சித் தாவல் ஏற்படுமோ என்ற அச்சத்தை காங்கிரஸ் கட்சி உணர்ந்தது. இதனால், முதற்கட்ட வேட்பாளர்கள் அறிவிப்பு தள்ளிப்போனது. 

இந்நிலையில், 51 தொகுதிகளில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. 2014-இல் காங்கிரஸ் கட்சியிடம் இருந்த 42 எம்எல்ஏ-க்களில் 22 எம்எல்ஏ-க்களின் பெயர் இன்றைய வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

கட்சியின் மாநிலத் தலைவர் பாலாசாகேப் தோரத், அவரது சொந்த ஊரான சங்கம்னேர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் தவிர கட்சியின் முக்கியத் தலைவர்களான மகாராஷ்டிர சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் விஜய் வாதேட்டிவார், முன்னாள் முதல்வர் அசோக் சவான் ஆகியோரது பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது.   

அதேசமயம், நாளை காலை ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்கு பாஜக ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணையவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாஜகவில் இணையப்போகும் அந்த 6 எம்எல்ஏ-க்கள் யார் என்ற பெயர் பட்டியலை அவர்கள் தெரிவிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com