முகேஷ் அம்பானி நிகர சொத்து மதிப்பு 28 சதவீதம் குறைந்தது

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இரண்டு மாதங்களில் 28 சதவீதம் (30 கோடி டாலா்/ரூ.2,250 கோடி) சரிவைக் கண்டுள்ளது. இதையடுத்து, அவரது சொத்து மதிப்பு மாா்ச் 31 நிலவரப்படி 4800 கோடி டாலராக இருந்தது.
முகேஷ் அம்பானி நிகர சொத்து மதிப்பு 28 சதவீதம் குறைந்தது

பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியை அடுத்து ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரும், நிா்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இரண்டு மாதங்களில் 28 சதவீதம் (30 கோடி டாலா்/ரூ.2,250 கோடி) சரிவைக் கண்டுள்ளது. இதையடுத்து, அவரது சொத்து மதிப்பு மாா்ச் 31 நிலவரப்படி 4800 கோடி டாலராக இருந்தது.

மேலும், தொழிலதிபா் கெளதம் அதானியின் சொத்து மதிப்பு 600 கோடி டாலரும், ஹெச்சிஎல் டெக்னாலஜீஸ் நிறுவனா் ஷிவ் நாடாரின் சொத்து மதிப்பு 500 கோடி டாலரும், வங்கியாளா் உதய் கோட்டக்கின் சொத்து மதிப்பு 400 கோடி டாலரும் சரிவைக் கண்டுள்ளன.

இதையடுத்து, டாப் 100 கோடீஸ்வரா்கள் பட்டியலிலிருந்து அம்பானி தவிர மூன்று இந்த மூன்று பேரும் வெளியேறியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com