இந்தியாவில் மேற்கு கடற்பகுதியில் குறைந்த மீன்வரத்து: காலநிலை மாற்றம் காரணமா?

இந்தியாவின் மேற்கு கடற்கரையில் மீன் பிடிப்பின் அளவு குறைந்துவிட்டதாக மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (சி.எம்.எஃப்.ஆர்.ஐ) கடல் மீன்பிடிப்பு அறிக்கை 2019 தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றத்தால் குறைந்த மீன்பிடிப்பு
காலநிலை மாற்றத்தால் குறைந்த மீன்பிடிப்பு

இந்தியாவின் மேற்கு கடற்கரையில் மீன் பிடிப்பின் அளவு குறைந்துவிட்டதாக மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (சி.எம்.எஃப்.ஆர்.ஐ) கடல் மீன்பிடிப்பு அறிக்கை 2019 தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் புவி வெப்பமடைதலும் அதன் காரணமாக காலநிலையில் ஏற்படும் மாற்றம் போன்றவை மீன்வரத்து குறைவதற்கு காரணமாக இருக்க வாய்ப்பிருப்பதாக சூழலியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
 
2019 ஆம் ஆண்டில், இந்தியாவின் மேற்கு கடற்கரையில் மகாராஷ்டிராவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக் குறைந்த வருடாந்திர மீன்பிடிப்பு அளவு பதிவாகியுள்ளது.

துறைமுகங்களில் கணக்கிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மீன் பிடிப்புகளின் அளவு 2019 ஆம் ஆண்டில் 2 லட்சத்து ஆயிரம் டன்னாக உள்ளது. இது 2018 ல் 2 லட்சத்து 95 ஆயிரம் டன்னாக இருந்தது. கடந்த ஒப்பீட்டளவில் 32% குறைவைக் குறிக்கிறது.

மீன் பிடிப்பதில் பெரும்பாலான அளாவு மும்பை நகரைச் சார்ந்துள்ளன. அதனைத் தொடர்ந்து ராய்காட் மற்றும் ரத்னகிரி பகுதிகளில் அதிக அளவிலான மீன்வரத்து பதிவாகியுள்ளன. கடல் மீன்பிடிப்பு அறிக்கையைப் பொருத்த வரையில் எல்லா மீன் இனங்களும் 2018 உடன் ஒப்பிடும்போது குறைந்த அளவில் பிடிபட்டுள்ளன.

தீவிர வானிலை மாறுதல்கள், நீடித்த மழைக்காலம் மற்றும் இளம்மீன்கள் தொடர்ந்து பெரிய அளவில் சுரண்டப்படுவது ஆகியவை குறைந்த அளவிலான மீன்பிடிப்புக்கு முக்கிய காரணங்களாக உள்ளதாக சி.எம்.எஃப்.ஆர்.ஐ மும்பை விஞ்ஞானி அகிலேஷ் தெரிவித்துள்ளார். இந்த தீவிர வானிலை நிகழ்வுகள் காலநிலை மாற்றத்தின் விளைவாகும். மேலும் அவை வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சி.எம்.எஃப்.ஆர்.ஐயின் மீன்வள வள மதிப்பீட்டுப் பிரிவின் அறிக்கை, இந்திய கடற்கரையிலுள்ள 1,265 கடல் மீன் இறங்கும் மையங்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com