கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சருக்கு கரோனா தொற்று

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு
கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு

கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கரோனா தொற்று இருப்பது இன்று பரிசோதனை முடிவில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'கரோனா பரவத் தொடங்கிய காலத்தில் இருந்தே 30 மாவட்டங்களில் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளேன். அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு நல்ல சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற அரசின் விருப்பத்திற்கு இணங்க பணியாற்றுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் தற்போது நானும் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறப் போகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

முன்னதாக கர்நாடகத்தில் முதல்வர் எடியூரப்பா, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா உள்ளிட்டோருக்கும் கரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com