சிறுகுறு தொழில்களில் முதலீடு: அந்நிய நிறுவனங்களுக்கு அமைச்சர் நிதின்கட்கரி  அழைப்பு

நெடுஞ்சாலைப் போக்குவரத்து மற்றும் சிறுகுறு, நடுத்தரத் தொழில்களில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளார்.
அமைச்சர் நிதின் கட்கரி
அமைச்சர் நிதின் கட்கரி

நெடுஞ்சாலைப் போக்குவரத்து மற்றும் சிறுகுறு, நடுத்தர தொழில்களில் அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அழைப்பு விடுத்துள்ளதாக சிறுகுறு நடுத்தர தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்துப்  பேசிய அமைச்சர் நிதின்கட்கரி, நாடு முழுவதும் 2030ஆம் ஆண்டிற்குள் சாலை விபத்துகள் இல்லாத நிலையை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும்,  “வாகன உற்பத்தி மற்றும் சிறுகுறு, நடுத்தர நிறுவனங்கள் நாட்டின் பொருளாதாரத்தின் இரண்டு முக்கிய வளர்ச்சி இயந்திரங்கள். இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஏற்கனவே சாலை பாதுகாப்பு துறையில் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்த ஒத்துழைப்பு சாலைகளுக்கு சிறந்த கட்டமைப்பையும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாய்ப்புகளையும் வழங்கியுள்ளது.சாலை மேம்பாட்டு நடவடிக்கைகளால் நாட்டில் 50 சதவிகிதம் வாகன விபத்துகள் குறையும். 2030 ஆம் ஆண்டிற்குள் சாலை விபத்துகள் அற்ற இந்தியாவை உருவாக்குவதே இலக்கு.” என்றார்.

இந்திய சாலை பாதுகாப்பு மதிப்பீட்டு திட்டத்தின் கீழ், 21 ஆயிரம் கி.மீ சாலைகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 3 ஆயிரம் கி.மீ சாலைகள் தொழில்நுட்ப மேம்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும் சாலை விபத்துக்களைக் குறைக்க தனது அமைச்சகம் நிறைய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்த கட்கரி இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் உலக வங்கியிடம் இருந்து ரூ.7 ஆயிரம் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சமூக விழிப்புணர்வு மூலம், அவசரகால சேவைகளை மேம்படுத்துதல், மருத்துவ காப்பீட்டிற்கு அழுத்தம் கொடுப்பது, அதிகமான மருத்துவமனைகளை வழங்குதல் போன்றவற்றால் சாலை பாதுகாப்பு இலக்குகளை அடைய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மைக்ரோ, சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள்  துறைதான் வரும் ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் என்று குறிப்பிட்ட கட்கரி, காப்பீடு, ஓய்வூதியம் மற்றும் பங்குச்சந்தை பொருளாதாரங்களில் பெரும் வாய்ப்புகள் இருப்பதால், காப்பீட்டுத் துறைகளில் முதலீட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com