நாட்டில் 2.68 கோடிக்கும் அதிகமானோருக்கு கரோனா பரிசோதனை

நாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை 2 கோடியே 68 லட்சத்து 45 ஆயிரத்து 688 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
ஐசிஎம்ஆர்
ஐசிஎம்ஆர்


புதுதில்லி: நாட்டில் ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை 2 கோடியே 68 லட்சத்து 45 ஆயிரத்து 688 பேருக்கு கரோனா தொற்று பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முதல் முறையாக புதன்கிழமை மட்டும் 8,30,391 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன.

இது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 2,68,45,688 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. ஆகஸ்ட் 12-ஆம் தேதி புதன்கிழமை மட்டும் 8,30,391 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 61,537 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 942 பேர் உயிரிழந்தனர். இதனால், பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 23,96,638 ஆக அதிகரித்தது. கரோனா தொற்றால் உயிரிழந்தோா் எண்ணிக்கையும் 46,091-ஆக அதிகரித்தது. நோய்த்தொற்றுக்காக 6,53,622 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.16,95,982  பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பலியானோர் விகிதம் 1.98% ஆக குறைந்திருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com