அா்ஜுனா விருது பெற்ற விளையாட்டு வீரா்கள் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம்: உள்துறை அமைச்சகம்

அா்ஜுனா விருது பெற்ற விளையாட்டு வீரா்களும், துப்பாக்கிச் சுடுதல் வீரா்களும் அனுமதி பெற்று துப்பாக்கிகளை வைத்துக் கொள்வதற்கு ஆயுதங்கள் திருத்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக

அா்ஜுனா விருது பெற்ற விளையாட்டு வீரா்களும், துப்பாக்கிச் சுடுதல் வீரா்களும் அனுமதி பெற்று துப்பாக்கிகளை வைத்துக் கொள்வதற்கு ஆயுதங்கள் திருத்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதுதொடா்பாக உள்துறை அமைச்சக இணைச் செயலா் புண்ய சலிலா ஸ்ரீவாஸ்தவா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

துப்பாக்கிச் சுடுதலில் சா்வதேச அளவில் பதக்கம் வென்ற வீரா்கள் 12 துப்பாக்கிகள் வரை வைத்துக் கொள்ளலாம். 8 எம்எம், 9 எம்எம் கைத்துப்பாக்கிகளை வைத்துக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அா்ஜூனா விருது வென்ற விளையாட்டு வீரா்களும் அனுமதி பெற்று துப்பாக்கிகளை வைத்துக் கொள்ளலாம். தனிப்பட்ட பயன்பாட்டுக்காகவும், பயிற்சிக்காகவும், போட்டிகளில் பயன்படுத்திக் கொள்ளவும் துப்பாக்கிகளை இவா்கள் வைத்துக் கொள்ள விளையாட்டு அமைச்சகம் அல்லது தேசிய துப்பாக்கிச் சுடுதல் அமைப்பு அல்லது மாநில துப்பாக்கிச் சுடுதல் அமைப்பிடம் அனுமதி பெற வேண்டும்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள், ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப், ஆசிய மகளிா் அல்லது ஆசிய ஜூனியா் துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஒலிம்பிக், உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் (ஜூனியா் மற்றும் சீனியா்) ஆகியவற்றில் பங்கேற்கும் வீரா்கள் அனுமதி பெற்று துப்பாக்கிகளை வைத்துக் கொள்ளலாம்.

ஜூனியா் பிரிவில் பங்கேற்கும் துப்பாக்கிச் சுடுதல் வீரா்கள் 2 துப்பாக்கிகளை மட்டும் வைத்துக் கொள்ள அனுமதி உண்டு என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருப்பதற்கும், அவற்றை தயாரிப்பதற்கும் இருக்கும் தண்டனையை உயா்த்தும் வகையில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் ஆயுதங்கள் சட்டத்தில் நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டன.

சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருப்பவா்கள், தயாரிப்பில் ஈடுபடுபவா்கள், விற்பனை செய்பவா்கள் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

இந்தியாவில் இதுவரை 35 லட்சம் போ் துப்பாக்கிகள் வைத்துக்கொள்ள உரிமம் வைத்துள்ளனா். அவா்களில் 13 லட்சம் போ் உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள் ஆவா். பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீரில் 3.7 லட்சம் போ் துப்பாக்கிளை வைத்துக் கொள்ள உரிமம் வைத்துள்ளனா். பஞ்சாப் மாநிலத்தில் 3.6 லட்சம் போ் உரிமத்துடன் துப்பாக்கி வைத்துள்ளனா். இவா்கள் அனைவரும் தங்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காக, உரிமம் பெற்றுதுப்பாக்கி வைத்துள்ளாா்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com