கைகளை கழுவாததற்காக தலித் இளைஞர் தாக்கப்பட்டார்

கைகளை கழுவாமல் உணவைத் தொட்டதற்காக ஒரு தலித் இளைஞர் நான்கு இளைஞர்களால் திரிசூலத்தால் தாக்கப்பட்டார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

உத்தரபிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் கைகளை கழுவாமல் உணவைத் தொட்டதற்காக ஒரு தலித் இளைஞர் நான்கு இளைஞர்களால் திரிசூலத்தால் தாக்கப்பட்டார்.

சனிக்கிழமை இரவு டோகாட்டி கிராமத்தில் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. அங்கு ஒரு 'பண்டாரா' (சமூக விருந்து) நடைபெற்றது. மொத்தக் கிராமமும் விழாவிற்கு அழைக்கப்பட்டது.

நிலக்கரி கடையில் பணிபுரியும் 30 வயதான உபேந்திர ராம், தன் கடையிலிருந்து நேராக விழாவிற்கு வந்திருந்தார். அவரது கைகளில் நிலக்கரி கறை இருந்தது.

ராம் தனக்காக உணவை எடுத்தவுடன், நான்கு இளைஞர்கள் அவர் கைகளை கழுவாமல் உணவை எடுப்பதை எதிர்த்தனர். வாய்மொழியாகத் தொடங்கிய வாக்குவாதம், விரைவில் அடிதடியாக மாறியது. அந்த நான்கு இளைஞர்களும் ராமை சூடான பாத்திரங்களால் தாக்கினர்.

ராம் தரையில் விழுந்த போது, இளைஞர்களில் ஒருவர் திரிசூலத்தால் அவரைத் தாக்கினார்.

தற்போது ராம் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் எந்த புகாரும் இதுவரை பதிவு செய்யப்படவில்லை என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காவல்துறை இன்னும் வழக்கு பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com