ஹரியாணா மாநில காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஷம்ஷிர் சிங் சுர்ஜிவாலா மரணம்

ஹரியாணா மாநில காங்கிரஸ்  கமிட்டி முன்னாள் தலைவர் ஷம்ஷிர் சிங் சுர்ஜிவாலா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
ஷம்ஷிர் சிங் சுர்ஜிவாலா
ஷம்ஷிர் சிங் சுர்ஜிவாலா

நர்வானா: ஹரியாணா மாநில காங்கிரஸ்  கமிட்டி முன்னாள் தலைவர் ஷம்ஷிர் சிங் சுர்ஜிவாலா உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.

ஹரியாணா மாநில காங்கிரஸ்  கமிட்டி முன்னாள் தலைவரும், ஹரியாணாவில் எதிர்க்கட்சித் தலைவராகவும்,  அமைச்சராகவும் இருந்த ஷம்ஷிர் சிங் சுர்ஜிவாலா காலமானார். இவர் நீண்ட காலமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார்.

ஷம்ஷிர் சிங் சுர்ஜிவாலா அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய ஊடக பொறுப்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலாவின் தந்தை ஆவார்.

விவசாயிகள் மத்தியில் செல்வாக்கு பெற்று இந்திய கிஸான் காங்கிரசின் தலைவராகவும் ஷம்ஷர் சிங் சுர்ஜிவாலா இருந்தார். 1967 முதல் நான்கு முறை நர்வானா தொகுதியிலிருந்தும், 2005 இல் ஒரு முறை கைதலிருந்தும் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஹரியாணா அரசில் நான்கு முறை அமைச்சராகவும், 1998 லவ் ஒரு முறை மாநிலங்களவை எம்.பி.யாகவும் இருந்தார்.

ஷம்ஷர் சிங் சுர்ஜிவாலா திங்கட்கிழமை மதியம் 3 மணிக்கு நர்வானாவில் தகனம் செய்யப்படுவார் என்று குடும்ப வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com