குடியரசு தினக் கொண்டாட்டம்: தில்லியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்

குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.
குடியரசு தினக் கொண்டாட்டம்: தில்லியில் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்

குடியரசு தினத்தை முன்னிட்டு தில்லியில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக தில்லி காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்: 

குடியரசு தினக் கொண்டாட்டங்கள் காரணமாக பல அடுக்குப் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. என்எஸ்ஜி, எஸ்பிஜி மற்றும் ஐடிபிபி போன்ற பிற பிரிவுகளுடன் தேவையான தொடர்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகைகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பாதுகாப்பு அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்படும்.

எஸ்டபள்யூஏடி தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. சந்தேகிக்கப்படும் நபர்களை சோதனை செய்யும் விதமாக முக அடையாளத்தை கண்டுபிடிக்கும் கருவி முக்கிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 22 ஆயிரம் தில்லி போலீஸார் மற்றும் கூடுதலாக மத்திய ஆயுதப்படையில் இருந்து 48 கம்பெனி போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியிலுள்ள அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் வசதிகள் சனிக்கிழமை காலை 6:00 மணி முதல் ஜனவரி 26 மதியம் 2:00 மணி வரை மூடப்படும் என மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com