மேலும் 47 சீன செயலிகளுக்கு தடை

நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாகக் கூறி மேலும் 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

புது தில்லி: நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாகக் கூறி மேலும் 47 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் மூலமாக நாட்டில் தடைசெய்யப்பட்ட சீன செயலிகளின் எண்ணிக்கை 106-ஆக அதிகரித்துள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து அந்த வட்டாரங்கள் கூறியதாவது:

தற்போது தடை செய்யப்பட்டுள்ள 47 சீன செயலிகளும் குளோன் மற்றும் பல்வேறு பயன்பாடுகளின் வகைகளை தரம் பிரித்துக்காட்டும் செயலிகளாகும். அவற்றை தடை செய்வது தொடா்பான உத்தரவு வெள்ளிக்கிழமை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த செயலிகளின் பட்டியல் உடனடியாக வெளியிடப்படவில்லை என்று தெரிவித்தன.

முன்னதாக, கடந்த மாதம் 29-ஆம் தேதி நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்புக்கு ஊறு விளைவிப்பதாகக் கூறி 59 சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com