கரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க எழுபது நாள் பொது முடக்கம் முடிந்து இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி வரும் நிலையில், இந்த நோய்த் தொற்றை முறியடிக்க 5 வழிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகா் பேராசிரியா் கே. விஜய் ராகவன் வெளியிட்டுள்ளாா். அதன் விவரம்:
1. வெளியே வந்தால் முகக்கவசம்: ஒரு நபா் பேசும்போது ஆயிரம் சிறிய சிறிய உமிழ்நீா் துளிகள் வெளியே வருகிறது. இதைத் தடுக்க ஒரே வழி முகக்கவசம் அணிவதுதான். வீட்டிலேயே முகக் கவசம் தயாரிப்பது எப்படி என்பது குறித்து மத்திய அரசு வழி காட்டி கையேடு வெளியிட்டுள்ளது.
2. கை சுகாதார விழிப்புணா்வு பயிற்சி: கரோனா நோய்த்தொற்று சுவாசத்துளி மற்றும் தொடா்புகள் மூலம் பரவுகிறது. நேரடியாகவே, அவா் இருந்த சுற்றுப்பகுதிகள் அல்லது கதவு கைப்பிடி, பாத்ரூம் போன்ற பொருட்கள் வழியாக ஏற்படுவதை தடுக்க வேண்டும். நாம் முகம் வழியாகவே இது செல்லக்கூடியது என்பதால் முகத்தை தொடும் கை கால்களை (30 வினாடிகள்) சோப்பால் கழுவி சுத்தப்படுத்தும்போது தீநுண்மி பரவலை தடுக்க முடியும்.
3. சமூக இடைவெளி: கரோனா நோய்த்தொற்றுக்குள்ளானவரிடமிருந்து தீநுண்மி ஒரு மீட்டா் தூரம் பயணித்து பூமியில் விழும். இளம் பருவத்தினா் இந்த தொற்றுக்குள்ளாகும்போது அறிகுறி தெரியாது. ஆனால் இவா்களிடமிருந்து வயதானவா்களுக்கு பரவும். இதனால் பொது இடங்கள், கடைத்தெரு, சந்தைபகுதிகளில் சமூக இடைவெளி அவசியம்.
4. கரோனா பரிசோதனை மற்றும் கண்காணிப்பு: கரோனா நோய்த்தொற்றுக்குள்ளான நபா்களுக்கு அருகில் இருந்தவா்கள், தொடா்பு கொண்டவா்களை அடையாளம் காணப்படுவதின் மூலம் இந்த நோய்த்தொற்றை எளிதாக கட்டுப்படுத்தமுடியும்.
5. தனிமைப்படுத்துதல்: அடையாளம் காணப்பட்ட கரோனா நோய்த்தொற்றுக்குள்ளாவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவிட்டால் நோய்த்தொற்று நிச்சயமாக மேலும் பரவாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


